» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பெயர் வைத்தால் சீனாவுக்கு சொந்தமாகிவிடாது : ஜெய்சங்கர் பதிலடி!

செவ்வாய் 2, ஏப்ரல் 2024 11:50:04 AM (IST)

"அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சீனா பெயரை மாற்றுவதால் அது அவர்களுக்கு சொந்தமாகிவிடாது" என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் மீது சீனா உரிமை கொண்டாடி வருகிறது. அங்குள்ள நிலங்களுக்கெல்லாம் புதிய பெயர்களை சூடி, தங்கள் வரைபடத்தில் சீனா சேர்த்தது. இந்த சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனங்களை தெரிவித்தது.

முதலில், அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 6 இடங்களின் பெயர்களையும் அடுத்து 15 இடங்களின் பெயர்களையும் 2023ல் 11 இடங்களின் பெயர்களையும் சீனா மாற்றியது. தற்போது 30 இடங்களின் பெயர்களை சீனா மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், குடியிருப்புகளும் ஆறுகள், ஏரி, மலைப்பகுதிகள் ஆகியவை அடங்கும். இவற்றுக்கு சீனாவின் மாண்டரின் மொழியில் புதிய பெயர்களை சூட்டியுள்ளது.

சீனாவின் அத்துமீறல் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது: அருணாச்சல பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஓர் அங்கம் தான். எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே நமது ராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கு பெயரை மாற்றினால் அது சீனாவுக்கு சொந்தமாகிவிடாது. அருணாச்சல பிரதேசத்தில் நமது ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஒரு பகுதியாகவே அருணாச்சல பிரதேசம் இன்றும் நேற்றும் நாளையும் தொடரும். நீங்கள் வசிக்கும் வீட்டை என் பெயருக்கு மாற்றிவிட்டால் அது எனக்கு சொந்தமாகிவிடாது. சீனாவின் செயல்கள், எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. அவ்வாறு அவர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory