» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கேரளா, தமிழகத்தின் தென் கடலோர பகுதிகளுக்கு கள்ளக்கடல் எச்சரிக்கை

செவ்வாய் 30, ஏப்ரல் 2024 4:54:22 PM (IST)

கேரளா மற்றும் தமிழகத்தின் தென்கடலோர பகுதிகளுக்கு, 'கள்ளக்கடல்' எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

எவ்விதமான அறிகுறிகளும் இன்றி திடீரென கடல் சீற்றம் அடைவது, 'கள்ளக்கடல்' நிகழ்வு என்று அழைக்கப்படுகிறது. திருடனை போல சற்றும் எதிர்பாராத தருணத்தில் வருவதால், கேரள மக்கள் இதை, கள்ளக்கடல் என அழைக்கின்றனர்.கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம், கேரளா மற்றும் தமிழகத்தின் தென் கடலோர பகுதிகளுக்கு நேற்று இரவு 11:30 மணி வரையிலுமான எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

கேரளா மற்றும் தென்கடலோர பகுதிகள் இரவு 11:30 மணி வரை கடும் சீற்றத்துடன் காணப்படும். எனவே, மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம். கடலோரம் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்படுகின்றனர். படகுகள் சேதமடைவதை தவிர்க்க, கடலோரங்களில் போதிய இடைவெளியுடன் படகுகளை நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory