» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பெரும்பான்மை பெற்றது தேசிய மாநாட்டு கட்சி!

வியாழன் 10, அக்டோபர் 2024 4:56:04 PM (IST)

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 4 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தேசிய மாநாட்டு கட்சி தனிப் பெரும்பான்மை பெற்றுள்ளது. 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக 26 தொகுதிகளுக்கும், 3-வது கட்டமாக 40 தொகுதிகளுக்கும் வாக்கப்பதிவு நடைபெற்றது. ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் அக்டோபர் 8 ஆம் தேதி எண்ணப்பட்டன. 

அதில், பெரும்பான்மை இடங்களை பிடித்து தேசிய மாநாடு மற்றும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. தேசிய மாநாடு கட்சி 42 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க. 29 இடங்களிலும் பிற கட்சிகள் ஆறு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. சுயேட்சைகள் ஏழு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

தேசிய மாநாடு கட்சி - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பியாரே லால் சர்மா, சதீஷ் ஷர்மா, சௌத்ரி முகமது அக்ரம் மற்றும் டாக்டர் ராமேஷ்வர் சிங் ஆகிய 4 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் தேசிய மாநாட்டு கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன்மூலம் தேசிய மாநாட்டு கட்சியின் பலம் 46 ஆக உயர்ந்துள்ளது. அதன்படி காங்கிரஸ் கூட்டணி இல்லாமல் தனியாக ஆட்சி அமைக்க தேவையான சட்டமன்ற உறுப்பினர்களை தேசிய மாநாட்டு கட்சி பெற்றுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory