» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

குடியுரிமைச் சட்டம் 6ஏ சட்டப் பிரிவு செல்லும் : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

வியாழன் 17, அக்டோபர் 2024 12:14:38 PM (IST)

வங்கதேசத்தில் இருந்து அசாமில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுக்கு வழங்கப்பட்ட இந்திய குடியுரிமை செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஜனவரி 1, 1966 முதல் மார்ச் 25, 1971-க்கு இடையில் வங்க தேசத்திலிருந்து அசாமுக்கு சட்ட விரோதமாகக் குடியேறியவர்களுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக 1985-ஆம் ஆண்டில் அசாம் ஒப்பந்தத்தில் பிரிவு 6ஏ இணைக்கப்பட்டது.

இந்நிலையில், அசாம் குடியேற்றத்துக்கு அங்கீகாரம் அளிக்கும் குடியுரிமைச் சட்டம் 1955ன் பிரிவு 6ஏ-வை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், குடியுரிமைச் சட்டம் 6ஏ சட்டப் பிரிவு செல்லும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகளில் 4 நீதிபதிகள் ஒரே தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் சூர்ய காந்த், எம்.எம். சுந்தரேஷ் மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் வழங்கிய ஒருமித்த தீர்ப்பில், புதிதாக சட்டம் இயற்றும் உரிமை நாடாளுமன்றத்துக்கு உள்ளதாக தெரிவித்தனர். நீதிபதி ஜே.பி. பார்திவாலா மட்டும், குடியுரிமைச் சட்டப் பிரிவு 6 ஏ அரசிலமைப்புச் சட்டத்திற்கு எதிராக உள்ளதாக தீர்ப்பளித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory