» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பாஜகவுக்காக வாழ்வை அர்ப்பணித்துள்ளவர்: அமித் ஷாவுக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து!

செவ்வாய் 22, அக்டோபர் 2024 10:15:24 AM (IST)

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது 60-ஆவது பிறந்தநாளை இன்று(அக். 22) கொண்டாடுகிறார். இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், "அமித் ஷா கடுமையாக உழைக்கும் ஒரு தலைவர். பாஜகவுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளவர். நிர்வாக பொறுப்புக்கு தலைமை வகிப்பதில் அமித் ஷா தன்னிகரற்றவராவார். அகண்ட பாரதம் கனவை நனவாக்குவதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவபவர். இந்நேரத்தில் அவர் நெடுநாள் நலமுடன் வாழ பிரார்த்திக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory