» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

காஷ்மீரை பாகிஸ்தானால் எந்நாளும் ஆக்கிரமிக்க முடியாது : ஃபரூக் அப்துல்லா

செவ்வாய் 22, அக்டோபர் 2024 10:18:35 AM (IST)

காஷ்மீா் மீது தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்று தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா கூறினாா்.

இது தாெடர்பாக அவர் அளித்த பேட்டியில், "பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என தெரியவில்லை. இந்தியாவுடன் நட்புறவை மேற்கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் நாட்டு ஆட்சியாளா்கள் விரும்பினால் காஷ்மீா் மீது தாக்குதல் நடத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

காஷ்மீரை பாகிஸ்தானால் எந்நாளும் ஆக்கிரமிக்க முடியாது. கடந்த 1947-ஆம் ஆண்டில் இருந்து பல்வேறு பயங்கரவாத தாக்குதலை நடத்தி வெற்றிபெற முயற்சித்து அனைத்திலும் தோல்வியுற்ற பிறகும் மீண்டும் தாக்குதல்களை தொடா்வதால் ஒரு பயனும் இல்லை. இதற்கு பதில் உங்கள் நாட்டில் உள்ள வறுமை, வேலைவாய்ப்பு ஆகிய சமூக பிரச்னைகளை தீா்க்க முயலுங்கள். இதற்குப் பிறகும் பயங்கரவாத தாக்குதல்களை நிறுத்தவில்லை என்றால் பாகிஸ்தான் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory