» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இந்தியாவை எந்த நாடும் புறக்கணிக்க முடியாது : நிர்மலா சீதாராமன் பெருமிதம்!
வியாழன் 24, அக்டோபர் 2024 12:40:26 PM (IST)

பொருளாதார வலிமை கொண்ட இந்தியாவை, எந்த நாடும் புறக்கணிக்க முடியாது என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வாஷிங்டனில், உலக வளர்ச்சி மையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். இதில் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:- அமெரிக்கா, சீனா உள்பட எந்த ஒரு நாட்டினாலும், இந்தியாவை புறக்கணிக்க முடியாது. இந்தியா ஜனநாயகம் மிக்க நாடு. அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்பதால், தனது செல்வாக்கை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
ஏனெனில், உலகில் உள்ள ஒவ்வொரு 6 நபர்களிலும் ஒரு இந்தியர் இருக்கிறார். எனவே, இந்தியாவின் பொருளாதாரத்தை யாராலும் நிராகரிக்க முடியாது. வளர்ந்த நாடுகள் மற்றும் மிகப்பெரிய நாடுகளில் செயல்படும் பெரிய நிறுவனங்களில் திறமை வாய்ந்த இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர்.தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல், தொழில்நுட்பத்தின் மூலம் பணிகளை மேற்கொள்வதில் இந்தியா சிறந்து விளங்குகிறது.
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் முதல் பலதரப்பு வங்கி வரையில் அனைத்திலும் இந்தியா சிறந்த நாடாக உள்ளது. இந்திய பொருளாதாரம் முன்பாக உள்ள மிகப்பெரும் சவாலாக வேலை வாய்ப்பு திறன் உள்ளது. பெரும்பாலான மாணவர்கள் பட்டம் முடித்து வெளியே வருகிறார்கள். ஆனால், இளைஞர்கள் பெற்றிருக்கும் டிகிரிக்கும் அவர்களுடைய வேலை வாய்ப்பு திறனுக்கும் இடையே இடைவெளி உளதாக வேலை அளிப்பவர்கள் கருதுகிறார்கள்" இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நடிகை திஷா பதானி வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்திய 2 பேர் என்கவுண்ட்டரில் கொலை!
வியாழன் 18, செப்டம்பர் 2025 8:31:54 AM (IST)

பிரதமர் மோடி பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், பினராயி விஜயன், ராகுல் காந்தி வாழ்த்து!
புதன் 17, செப்டம்பர் 2025 11:28:11 AM (IST)

டேராடூனில் மேகவெடிப்பால் கனமழை : வெள்ளத்தில் சிக்கிய 200 மாணவர்கள் மீட்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:49:09 PM (IST)

ஆதார் திருத்தம் கட்டணங்கள் உயர்வு : அக்.1 ஆம் தேதி முதல் அமல்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 12:25:39 PM (IST)

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று ஒருநாள் கூடுதல் அவகாசம்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 11:45:42 AM (IST)

ஒப்பந்த செவிலியர்களின் உழைப்பை தமிழக அரசு சுரண்டுகிறது: உச்சநீதிமன்றம் கண்டனம் !
திங்கள் 15, செப்டம்பர் 2025 4:56:10 PM (IST)
