» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

உத்தரபிரதேசம், கேரளா, பஞ்சாப் சட்டசபை இடைத்தேர்தல் நவ.,20க்கு மாற்றம்: இ.தே.ஆ. அறிவிப்பு

திங்கள் 4, நவம்பர் 2024 5:36:52 PM (IST)

கேரளா, உத்தரபிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் நடைபெற இருந்த சட்டசபை இடைத்தேர்தல் நவ.20க்கு மாற்றப்பட்டு உள்ளது.

உத்தரபிரதேசத்தில் 9, பஞ்சாபில் 4, கேரளாவில் 1 என மொத்தம் 14 சட்டசபை தொகுதிகளுக்கு நவ.13ல் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால், அந்த நாளில், திருவிழா மற்றும் கலாசார நிகழ்வுகள் நடைபெற உள்ளதால், தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என பா.ஜ., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

இதனையடுத்து, 14 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல் தேதியை நவ.,20ம் தேதிக்கு மாற்றி தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இங்கு ஓட்டு எண்ணிக்கை நவ.,20 ல் நடக்கும். அதேநேரத்தில் வயநாடு மக்களவைத் தொகுதிக்கு நவ.,13ல் நடைபெறும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது..


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory