» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவ. 25ல் தொடங்கும் : கிரண் ரிஜ்ஜு தகவல்!

செவ்வாய் 5, நவம்பர் 2024 5:16:08 PM (IST)

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவ.25-ல் தொடங்கி டிசம்பர் 20 வரை நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு கூறியுள்ளார். 

இது தொடர்பாக அவர் எக்ஸ் தள பதிவில் கூறியதாவது: மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் வரும் 25-ம் தேதி முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை குளிர்கால கூட்டத்தொடரை இரு அவைகளிலும் நடத்த ஜனாதிபதி ஒப்புதல் வழங்கி உள்ளார். மேலும் நவ.26-ம் தேதி நாடாளுமன்ற மையம் மண்டபத்தில் அரசியல் சாசனத்தின் 75-ம் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்படும் என பதிவிட்டுள்ளார்.

இந்த குளிர்காலக் கூட்டத்தொடரின் போது, ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் மற்றும் வக்பு (திருத்தம்) மசோதா, 2024 ஆகியவை பற்றி விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. இந்த இரண்டுக்கும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் என்பதால், கூட்டத்தொடரில் கடும் அமளி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory