» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மக்களவையில் வயநாட்டின் குரலாக இருப்பேன் : வாக்காளர்களுக்கு பிரியங்கா காந்தி நன்றி
சனி 23, நவம்பர் 2024 5:06:16 PM (IST)
நாடாளுமன்றத்தில் வயநாட்டின் குரலாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி, தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டார். இதன்படி காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி, பாஜக வேட்பாளராக நவ்யா அரிதாஸ், இடதுசாரி கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளராக சத்யன் மெகோரி களமிறங்கினர்.
இந்த சூழலில் வயநாடு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகிறது. இந்த இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இந்நிலையில், வயநாடு மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "வயநாட்டின் என் அன்பு சகோதரர் மற்றும் சகோதரிகளே, நீங்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி. காலப்போக்கில், இந்த வெற்றி உங்கள் வெற்றியாக இருப்பதை நீங்கள் உண்மையிலேயே உணர்வீர்கள் என்பதையும், உங்களை பிரதிநிதித்துவப்படுத்த நீங்கள் தேர்ந்தெடுத்த நபர் உங்கள் நம்பிக்கைகளையும் கனவுகளையும் புரிந்துகொண்டு உங்களுக்காக போராடுவதையும் உறுதி செய்வேன். நாடாளுமன்றத்தில் உங்கள் குரலாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
இந்த மரியாதையை எனக்கு வழங்கியதற்கு நன்றி, மேலும் நீங்கள் எனக்கு அளித்த அபரிமிதமான அன்புக்கு நன்றி. கேரளா முழுவதும் உள்ள தலைவர்கள், தொழிலாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் இந்த பிரசாரத்தில் நம்பமுடியாத அளவிற்கு கடினமாக உழைத்த எனது அலுவலக சகாக்கள், என அனைவருக்கும் நன்றி.
என் அம்மா, ராபர்ட் மற்றும் எனது பிள்ளைகள்-ரைஹான் மற்றும் மிராயா ஆகியோர் எனக்கு அளித்த அன்புக்கும் தைரியத்திற்கும் நன்றி என்ற சொல் போதாது. அதேபோல என் சகோதரர் ராகுல் காந்தி, அனைவரையும் விட துணிச்சலானவர். எனக்கு அவர் வழி காட்டியதற்கும், எப்போதும் என் பின்னால் இருப்பதற்கும் நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.
முட்டாள்Nov 24, 2024 - 09:58:02 AM | Posted IP 172.7*****