» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பிரதமர் மோடியுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு

செவ்வாய் 24, டிசம்பர் 2024 12:11:56 PM (IST)



டெல்லி லோக் கல்யாண் சாலையில் உள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடியை ஆளுநர் சந்தித்து பேசினார். 

தமிழ்நாட்டில் ஆளுநருக்கும், அரசுக்கும் இடையே துணை வேந்தர் நியமனம் உள்ளிட்ட விவகாரங்களில் மீண்டும் கருத்து மோதல்கள் ஏற்பட்டு வரும் நிலையில், பிரதமர் மோடியை டெல்லியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்து பேசியுள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி தனிப்பட்ட பயணமாக டெல்லி செல்வதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், டெல்லி லோக் கல்யாண் சாலையில் உள்ள பிரதமர் இல்லத்தில் மோடியை ஆளுநர் சந்தித்து பேசி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கும், புதிய கல்வி கொள்கைக்கும் தமிழ்நாட்டில் திமுக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழக அரசியல் சூழல், சட்டம் ஒழுங்கு தொடர்பாகவும் பிரதமர் மோடியிடம் ஆளுநர் ஆர்.என். ரவி எடுத்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களையும் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory