» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மத்திய அரசு ஊழியர்களுக்கான 8-வது ஊதியக் குழு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

வியாழன் 16, ஜனவரி 2025 4:57:18 PM (IST)

மத்திய அரசு ஊழியர்களுக்கான 8-வது ஊதியக் குழுவை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழு 2014-ல் அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரைகள் 2016-ம் ஆண்டு ஜனவரி 1-ம்தேதி செயல்படுத்தப்பட்டன. இந்த 7-வது ஊதியக் குழுவின் பதவிக்காலம் 2026-ல் முடிவடைய உள்ள நிலையில், 8-வது ஊதியக் குழுவை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த குழுவின் தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 8-வது ஊதியக் குழு பரிந்துரை வழங்கும் பட்சத்தில் அரசு ஊழியர்களின் சம்பளம், அகவிலைப்படி பெருமளவு அதிகரிக்கும்.

இந்தியாவில் 1947 முதல் இதுவரை 7 ஊதியக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரசு ஊழியர்களுக்கான சம்பள கட்டமைப்புகள், சலுகைகள் உள்ளிட்டவற்றை தீர்மானிப்பதில் ஊதியக் குழு முக்கிய பங்கு வகிக்கிறது. பெரும்பாலான அரசு நிறுவனங்கள் ஊதியக் குழுவின் பரிந்துரைகளை பின்பற்றுகின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory