» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
புதிய வருமான வரி மசோதா மக்களவையில் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்!
வியாழன் 13, பிப்ரவரி 2025 5:20:59 PM (IST)

புதிய வருமான வரி மசோதாவை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல் செய்தார்.
புதிய வருமான வரி சட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாகவும், அது தொடர்பான மசோதா நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என்றும் பட்ஜெட் உரையின்போது நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதன்படி, புதிய வருமான வரி மசோதா 2025, நாடாளுமன்ற மக்களவையில் இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்யப்பட்டது.
இதனை தாக்கல் செய்து பேசிய நிர்மலா சீதாராமன், வரி செலுத்துவோருக்கு எளிதில் புரியும் வகையில் எளிமைப்படுத்தப்பட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மசோதாவில் நீளமான சொற்களுக்கு பதில் சிறிய சொற்கள் இடம்பெற்றுள்ளதாகவும், முந்தைய ஆண்டு, மதிப்பீட்டு ஆண்டு ஆகிய சொற்களுக்கு பதில், வரி ஆண்டு என்ற வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, புதிய வருமான வரி சட்டம் ஆய்வுக்காக நாடாளுமன்ற நிலைக் குழுவிற்கு அனுப்பப்பட உள்ளது. இந்த சட்டம் அடுத்த நிதியாண்டில் இருந்து அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு நிறைவு பெற்ற நிலையில் மக்களவை மார்ச் 10-ந்தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு ஏப்ரல் 4-ந்தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கூடங்குளம் அணுஉலையை நிரந்தரமாக மூட வேண்டும் : வைகோ வலியுறுத்தல்!
புதன் 26, மார்ச் 2025 5:35:06 PM (IST)

அலாகாபாத் நீதிமன்றத்தின் சர்ச்சைக்குரிய தீர்ப்பு நிறுத்திவைப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு!
புதன் 26, மார்ச் 2025 11:49:52 AM (IST)

தமிழகத்தில் தே.ஜ. கூட்டணி ஆட்சி அமையும்: இபிஎஸ் சந்திப்புக்குப் பிறகு அமித்ஷா நம்பிக்கை
புதன் 26, மார்ச் 2025 11:25:23 AM (IST)

தற்காப்புக் கலை பயிற்சியாளர் ஹுசைனி மறைவு: ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இரங்கல்!,
செவ்வாய் 25, மார்ச் 2025 5:07:23 PM (IST)

வடமாநில எம்.பி.க்களுக்கு ஏன் ஆங்கிலம் பேச தெரிவதில்லை? கலாநிதி வீராசாமி கேள்வி!
செவ்வாய் 25, மார்ச் 2025 12:01:17 PM (IST)

நூறு நாள் வேலை திட்டத்தில் தமிழ்நாட்டிற்கான நிதி நிறுத்தம் குறித்து திமுக நோட்டீஸ்!
செவ்வாய் 25, மார்ச் 2025 11:50:45 AM (IST)
