» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ரம்ஜான் நோன்பு காலத்தில் முஸ்லிம் ஊழியர்களின் பணி நேரம் குறைப்பு: தெலுங்கானா அரசு அறிவிப்பு
புதன் 19, பிப்ரவரி 2025 11:23:45 AM (IST)
ரம்ஜான் நோன்புக் காலம் தொடங்க உள்ள நிலையில், தெலங்கானாவில் முஸ்லிம்களுக்கு பணி நேரத்தைக் குறைத்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், ரம்ஜான் நோன்புக் காலம் தொடங்க உள்ள நிலையில், முஸ்லிம்களுக்கு பணி நேரத்தைக் குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மார்ச் 1 அல்லது 2-ம் தேதி பிறையைப் பொறுத்து தொடங்கும் ரமலான் மாதத்தில் முஸ்லிம் ஊழியர்கள் ஒரு மணி நேரம் முன்னதாகவே வீடு திரும்பலாம் என்ற உத்தரவை தெலுங்கானா அரசு பிறப்பித்துள்ளது.
அனைத்து அரசு முஸ்லிம் ஊழியர்கள், ஆசிரியர்கள், ஒப்பந்த ஊழியர்கள், அவுட்சோர்சிங், வாரியம் மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்குப் பொருந்தும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவசரநிலை ஏற்பட்டால் ஊழியர்கள் தங்கியிருக்க வேண்டியிருக்கும் என்றும் அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா அரசின் இந்த அறிக்கையை அம்மாநில பா.ஜ.க. விமர்சித்து வருகிறது. தெலங்கானா அரசின் இந்த நடவடிக்கை முஸ்லிம்களை திருப்திப்படுத்தும் தந்திரம். நவராத்திரி விரதத்தின்போது இந்துக்களுக்கு இதுபோன்ற சலுகைகள் வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டி வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவா உள்பட 3 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்
திங்கள் 14, ஜூலை 2025 4:54:19 PM (IST)

நிமிஷா விவகாரத்தில் எல்லைக்கு மீறி எதுவும் செய்ய முடியவில்லை: மத்திய அரசு தகவல்
திங்கள் 14, ஜூலை 2025 4:46:38 PM (IST)

டெல்லியில் மாயமான பல்கலைக்கழக மாணவி யமுனை ஆற்றில் சடலமாக மீட்பு!
திங்கள் 14, ஜூலை 2025 11:36:00 AM (IST)

நாம் அதிக சமத்துவத்தை நோக்கி முன்னேறி வருகிறோம்: பிரதமர் மோடி பெருமிதம்
ஞாயிறு 13, ஜூலை 2025 6:47:17 PM (IST)

இலவச ஐபிஎல் டிக்கெட்டுகள் கேட்டு மிரட்டல் ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவர் கைது!
சனி 12, ஜூலை 2025 5:50:59 PM (IST)

ஏர் இந்தியா என்ஜின் சுவிட்சுகள் அணைக்கப்பட்டதா? விசாரணை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்!
சனி 12, ஜூலை 2025 10:17:14 AM (IST)
