» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
என்னை பழிவாங்க அமலாக்கத் துறையை மத்திய அரசு ஏவி விடுகிறது: ராபர்ட் வாத்ரா குற்றச்சாட்டு!
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 5:11:26 PM (IST)
"என்னை பழிவாங்க மத்திய அரசு அமலாக்கத் துறையை ஏவி விடுகிறது" என்று பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வாத்ரா கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியாவின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வாத்ராவுக்கு அமலாக்கத்துறை இரண்டாவது முறை சம்மன் அனுப்பி உள்ளது. இதனையடுத்து இன்று (ஏப்.,15) அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.கடந்த 2018ல் குருகிராமில் உள்ள 3.5 ஏக்கர் நிலம் வாங்கி விற்றதில் இரு நிறுவனங்கள் இடையே சட்ட விரோத பண பரிமாற்றம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் வட்டியில்லாமல் ரூ.65 கோடி கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே அமலாக்கத்துறை ஏப்.8ல் ஒரு சம்மன் அனுப்பியது. தற்போது 2வது சம்மன் அனுப்பி உள்ளது. ஆனாலும் வாத்ரா ஆஜராகாமல் காலம் தாழ்த்தி வந்தார். இந்நிலையில் இன்று ஆஜரானார்.
முன்னதாக பேசிய ராபர்ட் வாத்ரா, ''இது எனக்கு எதிராக மத்திய அரசின் சதி திட்டம். என்னை பழிவாங்க அரசு இயந்திரத்தை ஏவி விடுகிறது. நான் எப்போதெல்லாம் மக்களுக்காக பேசுகிறேனோ, அப்போதெல்லாம் என் வாயை மூட இதுபோன்ற செயல்களில் மத்திய அரசு ஈடுபடுகிறது என குற்றம் சாட்டியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சட்டவிரோத தகவல், படங்கள் பதிவிட்டால் தடை: பயனர்களுக்கு எக்ஸ் தளம் எச்சரிக்கை
திங்கள் 5, ஜனவரி 2026 12:11:59 PM (IST)

பெண்களின் ஆபாச ஏஐ வீடியோ, படங்களை நீக்க வேண்டும்: எக்ஸ் தளத்துக்கு மத்திய அரசு கெடு!
சனி 3, ஜனவரி 2026 3:37:12 PM (IST)

இந்தியாவின் துணிச்சல் மிக்க வீராங்கனை வேலுநாச்சியார்: பிரதமர் மோடி புகழாரம்!
சனி 3, ஜனவரி 2026 11:06:20 AM (IST)

மத்திய பிரதேசத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த விவகாரம்: உயிரிழப்பு 11 ஆக உயர்வு!
வெள்ளி 2, ஜனவரி 2026 5:05:35 PM (IST)

துரந்தர் திரைப்படத்திற்கு லடாக்கில் வரி விலக்கு : ஆளுநர் கவிந்தர் குப்தா அறிவிப்பு
வெள்ளி 2, ஜனவரி 2026 3:47:34 PM (IST)

நாடு முழுவதும் வாய்ஸ் ஓவர் வைஃபை சேவை அறிமுகம் செய்த பி.எஸ்.என்.எல்.
வெள்ளி 2, ஜனவரி 2026 12:29:19 PM (IST)

