» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு நிறுத்தம்: பிசிசிஐ அறிவிப்பு!
வெள்ளி 9, மே 2025 3:25:42 PM (IST)

போர்ப் பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
18-ஆவது ஐபிஎல் போட்டிகள் கடந்த மார்ச். 22ஆம் தேதியில் இருந்து நடைபெற்று வருகின்றன. ஐபிஎல் இறுதிப் போட்டி மே.25ஆம் தேதி நடைபெறவிருந்தது. இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றத்தினால் போட்டிகளை காலவரையின்றி நிறுத்திவைக்கப்பட்டதாக பிசிசிஐ பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு தகவல் அளித்துள்ளது.
இந்நிலையில் ஐபிஎல் நிர்வாகம் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வாரத்திற்கு மட்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. பிசிசிஐ இது குறித்து கூறியதாவது: ஒரு வாரத்திற்கு ஐபிஎல் போட்டிகளை நிறுத்திவைக்கிறோம். இந்த முடிவினை ஐபிஎல் போட்டிகளை நிர்வகிக்கும் குழுவினர் எடுத்துள்ளனர்.
அனைத்து அணிகளின் பிரதிநிதிகள், வீரர்களின் நிலைமை, ஒளிபரப்பாளர்கள், விளம்பரதாரர்கள், ரசிகர்களின் நன்மைக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் பிசிசிஐ இந்திய ராணுவத்தினர் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளது.
இந்தச் சவாலான காலக்கட்டத்தில் பிசிசிஐ நாட்டிற்கு ஆதரவாக இருக்கிறது. இந்திய அரசாங்கம், ராணுவத்துடன் துணை நிற்கிறோம். ஆபரேஷன் சிந்தூரில் நாயகர்களாக இருக்கும் ராணுவத்தின் தைரியம், சுயநலமற்ற சேவைக்கு சல்யூட் எனக் குறிப்பிட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மில்க்ஷேக்கில் விஷம் கலந்து தந்தையை கொன்ற பெண் காவலர்: 3 ஆண்டுகளுக்குப் பின் அம்பலம்!
ஞாயிறு 29, மார்ச் 2026 10:41:26 AM (IST)

மேற்காசிய நெருக்கடியை முழு பலத்துடன் இந்தியா எதிர்கொண்டு வருகிறது: பிரதமர் மோடி உரை
சனி 28, மார்ச் 2026 4:10:10 PM (IST)

ஏப்ரல் 1 முதல் வங்கி விதிமுறைகளில் அதிரடி மாற்றம்: ஏ.டி.எம் பரிவர்த்தனை கட்டணம் உயர்வு!
சனி 28, மார்ச் 2026 12:18:19 PM (IST)

நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கா? சமூக வலைதள வதந்திகளுக்கு மத்திய அரசு விளக்கம்!
வெள்ளி 27, மார்ச் 2026 11:49:11 AM (IST)

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி அதிரடி குறைப்பு: மத்திய அரசு நடவடிக்கை
வெள்ளி 27, மார்ச் 2026 10:49:35 AM (IST)

எரிபொருள் தட்டுப்பாடு என வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை : மத்திய அரசு எச்சரிக்கை!
வெள்ளி 27, மார்ச் 2026 8:32:34 AM (IST)

