» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கேரளாவில் தொடரும் கனமழை: 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!!
வெள்ளி 23, மே 2025 5:29:42 PM (IST)
கேரளாவில் கனமழை நீடித்து வரும் நிலையில், 12 மாவட்டங்களில் அதிகனமழைக்கான மஞ்சள் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு அரபிக்கடலில் நேற்று காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனால், ஓரிரு நாட்களில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கேரளாவில் பல இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் மே 26ம் தேதி வரையில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், படகுகளை பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைத்துக் கொள்ளவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சமயங்களில் கடற்கரை பகுதிகளுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பத்தினம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திரிச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய 12 மாவட்டங்களில் இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கண்ணூர், காசர்கோடு மஞ்சள் அலர்ட்; பத்தினம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திரிச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டடங்களில் நாளை மறுநாள் (மே 25) ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மே 26: ஆரஞ்ச் அலர்ட் ; திரிச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடுமஞ்சள் அலர்ட்; திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, ஆரஞ்ச் அலர்ட் பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் அதிகனமழை பெய்யும். 11 செ.மீ., முதல் 20 செ.மீ., வரை மழை பெய்யும். மஞ்சள் அலர்ட் பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் 6 செ.மீ., முதல் 11 செ.மீ., மழை பொழிவு இருக்கும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மைனர் பெண்ணை கடத்திக் கொன்று ட்ராலி பேக்கில் வைத்து உடல் வீச்சு : காதலன் உட்பட 7 பேர் கைது!
புதன் 4, ஜூன் 2025 5:21:16 PM (IST)

கமல்ஹாசன் மீது நாங்கள் மென்மையான போக்கை காட்டவில்லை : கர்நாடக துணை முதல்வர்
புதன் 4, ஜூன் 2025 12:47:26 PM (IST)

18வது சீசனில் கோப்பையை வென்ற ஆர்சிபி அணி : தேர்தல் ஆணையம் நூதன முறையில் வாழ்த்து!
புதன் 4, ஜூன் 2025 11:12:21 AM (IST)

சிறுமி பலாத்காரம்... உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால் மரணம்: ராகுல் கண்டனம்
செவ்வாய் 3, ஜூன் 2025 5:10:20 PM (IST)

நீங்கள் என்ன வரலாற்று ஆய்வாளரா? கமல் ஹாசனுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி
செவ்வாய் 3, ஜூன் 2025 12:45:30 PM (IST)

தக் லைப் தடை விவகாரம்: கர்நாடகா திரைப்பட வர்த்தக சபைக்கு முதல்வர் சித்தராமையா ஆதரவு!
திங்கள் 2, ஜூன் 2025 4:34:43 PM (IST)
