» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் ஏன்? தமிழக காவல்துறை பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!
புதன் 18, ஜூன் 2025 12:03:10 PM (IST)
ஏடிஜிபி ஜெயராமை பணியிடை நீக்கம் செய்தது ஏன்? என்று தமிழக காவல்துறை விளக்கம் அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறுவன் கடத்தல் வழக்கு தொடர்பாக தன்னை கைது செய்ய உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஏடிஜிபி ஜெயராம், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். அந்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரிக்கப்பட்டது.சிறுவன் கடத்தல் வழக்கில், விசாரணைக்கு ஒத்துழைப்பதால், பணியிடை நீக்க உத்தரவை திரும்பப் பெறுவது குறித்து பரிசீலிக்குமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது. சிறுவன் கடத்தல் வழக்கில் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறி, ஏடிஜிபி ஜெயராம் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பணியிடை நீக்கம் செய்தது ஏன் என்று தமிழக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
உரிய விளக்கம் கேட்டு நீதிமன்றத்தில் தெரிவிக்கிறேன் என வழக்கறிஞர் தரப்பில் கூறப்பட்ட நிலையில், உரிய விளக்கம் கேட்டு நாளையே தினமே நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது. மேலும், சிறுவன் கடத்தல் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பதால், பணி நீக்க உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்பது குறித்து பரிசீலிக்க நீதிபதிகள் யோசனை தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக மக்கள் ஸ்டாலினுக்கு மீண்டும் ஒருமுறை வெற்றியைப் பரிசளிப்பார்கள்: கெஜ்ரிவால் நம்பிக்கை!
திங்கள் 20, ஏப்ரல் 2026 11:45:23 AM (IST)

மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம்: இந்தியாவில் சமையல் எரிவாயு பயன்பாடு 12.8% சரிவு!
திங்கள் 20, ஏப்ரல் 2026 10:55:14 AM (IST)

ஹார்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் மீது துப்பாக்கிச்சூடு – மத்திய அரசு கடும் கண்டனம்!
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 9:34:00 AM (IST)

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு: அமைச்சரவை ஒப்புதல்
சனி 18, ஏப்ரல் 2026 5:27:06 PM (IST)

இண்டியா கூட்டணி எதிர்ப்பு எதிரொலி: மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான மசோதா தோல்வி
சனி 18, ஏப்ரல் 2026 10:45:21 AM (IST)

தென் மாநிலங்களை அதிகாரமற்றதாக மாற்ற பாஜக முயற்சி: ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டு
வெள்ளி 17, ஏப்ரல் 2026 4:36:14 PM (IST)


nan thaanJun 18, 2025 - 04:04:27 PM | Posted IP 162.1*****