» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தெலுங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து: 10 பேர் உயிரிழப்பு!

திங்கள் 30, ஜூன் 2025 4:46:07 PM (IST)



தெலுங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும், 20 படுகாயமடைந்தனர். 

தெலுங்கானா மாநிலம் மடக் மாவட்டம் பஷ்யல்ராம் பகுதியில் ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ரசாயன தொழிற்சாலையில் மருந்து பொருட்களுக்கு தேவையான ரசாயனங்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்நிலையில், இந்த தொழிற்சாலையில் உள்ள கலவை எந்திரத்தில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. 

இந்த விபத்தில் தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டிருந்த 10 பேர் உயிரிழந்தனர். மேலும், 20 படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். படுகாயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory