» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
காமராஜரின் உயரிய சிந்தனைகள் நமக்கு ஊக்கமளிக்கும்: பிரதமர் மோடி மரியாதை
செவ்வாய் 15, ஜூலை 2025 10:18:29 AM (IST)
காமராஜரின் உயரிய சிந்தனைகள் நமக்கு ஊக்கமளிக்கும் என்று அவரது 123-வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டை 9 வருடங்கள் ஆட்சி செய்த பெருந்தலைவர் காமராஜரின் 123-வது பிறந்தநாளான இன்று கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. அரசியல் தலைவர்கள், காமராசரின் புகழை போற்றி வருகின்றனர். இந்நிலையில், காமராசரின் பிறந்தநாளையொட்டி, பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; "கே. காமராஜ் அவர்களின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் முன்னணியில் இருந்த அவர், சுதந்திரத்திற்குப் பிந்தைய நமது பயணத்தின் வளர்ச்சிக்குரிய ஆண்டுகளில் விலைமதிப்பற்ற தலைமைத்துவத்தை வழங்கினார். அவரது உயரிய சிந்தனைகளும், சமூக நீதி குறித்த உறுதிப்பாடும் நம் அனைவருக்கும் மகத்தான ஊக்கமளிக்கும்" இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விவசாயியின் மகளின் திருமணத்தில் ராகுல் காந்தி பங்கேற்பு: கிராம மக்கள் நெகிழ்ச்சி
செவ்வாய் 10, மார்ச் 2026 5:44:52 PM (IST)

எரிவாயு தட்டுப்பாடு: மும்பை, பெங்களூருவில் உணவகங்கள் மூடல் - பொதுமக்கள் அதிர்ச்சி!
செவ்வாய் 10, மார்ச் 2026 5:37:46 PM (IST)

8-ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நீதித்துறை குறித்து சர்ச்சை: மன்னிப்பு கோரியது என்.சி.இ.ஆர்.டி.!
செவ்வாய் 10, மார்ச் 2026 4:50:27 PM (IST)

எரிபொருள் தட்டுப்பாட்டைத் தடுக்க எஸ்மா சட்டம் அமல்: பதுக்கலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை!
செவ்வாய் 10, மார்ச் 2026 12:25:37 PM (IST)

இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு கேள்விக்குறி; விவாதிக்க கார்கே வலியுறுத்தல்!
திங்கள் 9, மார்ச் 2026 5:14:50 PM (IST)

குடியரசுத் தலைவருக்கு அவமதிப்பு: மேற்கு வங்க அரசு அறிக்கை அளிக்க மத்திய உள்துறை செயலர் உத்தரவு
திங்கள் 9, மார்ச் 2026 12:46:02 PM (IST)

