» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தெருநாய்கள் விவகாரத்தில் மனிதாபிமான வழி தேவை: பிரியங்கா காந்தி வலியுறுத்தல்!

செவ்வாய் 12, ஆகஸ்ட் 2025 5:09:40 PM (IST)

தெருநாய்களை அகற்றும் விவகாரத்தில் மனிதாபிமான வழியைக் கண்டறிய வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் சுற்றித் திரியும் அனைத்து தெருநாய்களையும் பிடித்து 8 வாரங்களுக்குள் காப்பகங்களில் அடைத்து பராமரிக்க உச்சநீதிமன்றம் நேற்று(திங்கள்கிழமை) உத்தரவிட்டது. இந்த நடவடிக்கைக்கு இடையூறு செய்யும் விதத்தில் நடந்துகொள்ளும் மக்கள் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் அல்லது அமைப்புகளின் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைத் தொடர்ந்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில், "டெல்லி நகரத்தின் அனைத்து தெருநாய்களையும் ஒரு சில வாரங்களுக்குள் காப்பகங்களுக்கு மாற்றுவது அவற்றை கொடூரமாக மனிதாபிமானமற்ற முறையில் நடத்துவதற்கு வழிவகுக்கும். அவற்றை வைத்திருக்க போதுமான காப்பகங்கள்கூட இங்கு இல்லை.

நகர்ப்புறச் சூழலில் உள்ள விலங்குகள் மோசமான சிகிச்சை மற்றும் மிருகத்தனத்திற்கு ஆளாகின்றன. நிச்சயமாக இந்த சூழ்நிலையை நிர்வகிக்க ஒரு சிறந்த வழி இருக்கலாம்.இந்த அப்பாவி விலங்குகளைப் பாதுகாப்பாக கவனிக்க ஒரு சிறந்த மனிதாபிமான வழியைக் கண்டறிய வேண்டும். நாய்கள் மிகவும் அழகான, மென்மையான உயிரினங்கள். அவைகள் இப்படியான கொடுமைக்கு ஆளாகக்கூடாது" என்று பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து

ஆனந்த்Aug 13, 2025 - 08:54:55 AM | Posted IP 172.7*****

தனக்கு வந்தால் தெரியும் காய்ச்சலும் தலைவலியும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory