» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

விசாரணைக்கு வந்த இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் : நீதிபதி பணி இடைநீக்கம்

வெள்ளி 29, ஆகஸ்ட் 2025 4:55:00 PM (IST)

கேரளாவில், விவாகரத்து வழக்கு விசாரணைக்காக வந்த இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நீதிபதி பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்ட குடும்ப நல நீதிபதியாக இருந்தவர் உதயகுமார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் விவாகரத்து வழக்கு விசாரணைக்காக வந்த ஒரு இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த இளம்பெண் கொல்லம் மாவட்ட நீதிபதியிடம் புகார் அளித்தார். அந்த புகார் கேரள உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இந்த புகார் மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், குடும்ப நல நீதிபதி உதயகுமாரை கொல்லம் மாவட்ட வாகன விபத்து தீர்ப்பாயத்திற்கு இடம் மாற்றம் செய்து உத்தரவிட்டது. மேலும் இதுதொடர்பாக உயர்நீதிமன்ற பதிவாளர் விசாரணை நடத்தி அறிக்கையாக தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து தலைமை நீதிபதி அடங்கிய நீதிபதிகள் குழுவினர் குற்றம்சாட்டப்பட்ட நீதிபதி உதயகுமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory