» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
வங்கியில் கொள்ளைபோன ரூ.5 கோடி நகை, பணம் மீட்பு: ஊழியர் உள்பட 5 பேர் கைது
வியாழன் 4, செப்டம்பர் 2025 8:51:08 AM (IST)
மத்திய பிரதேசத்தில் வங்கியில் கொள்ளையடித்த ஊழியர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5 கோடி நகை மற்றும் பணம் மீட்கப்பட்டது.
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் அருகே உள்ள மகாநந்தா நகரில் பாரத ஸ்டேட் வங்கி உள்ளது. இந்த வங்கியில் கடந்த 1-ந்தேதி இரவில் புகுந்த கொள்ளையர்கள் சிலர் ஏராளமான நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பிச்சென்றனர்.
மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக உஜ்ஜைன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்தனர். அப்போது 2 கொள்ளையர்கள் வங்கிக்குள் புகுந்து லாக்கரை திறந்து பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. கொள்ளையடிக்கப்பட்ட நகைகள், வங்கியின் வாடிக்கையாளர்கள் அடகு வைத்தவை ஆகும்.
லாக்கரை திறந்து கொள்ளையடித்ததன் மூலம் வங்கி ஊழியர் யாரும் இதன் பின்னணியில் இருக்கக்கூடும் என்று சந்தேகித்த போலீசார், ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஒரு ஊழியர்தான் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இந்த கொள்ளையை அரங்கேற்றியது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அந்த ஊழியர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5 கோடி நகை மற்றும் ரூ.8 லட்சத்தை பறிமுதல் செய்தனர். வங்கியில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட மொத்த நகை மற்றும் பணம் குறித்த விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை. இதற்கிடையே வங்கி பாதுகாப்பில் அலட்சியமாக இருந்த மேனேஜர் மற்றும் 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மருத்துவ உலகில் பெரு வியப்பு: 5 நாட்கள் போராடி 4 குழந்தைகளை சுகப்பிரசவத்தில் பெற்றெடுத்த பெண்!
சனி 16, மே 2026 5:24:58 PM (IST)

பிரதமரின் வேண்டுகோளை மீறி வாகன ஊர்வலம்: பாஜக பிரமுகர் மீது ம.பி முதல்வர் நடவடிக்கை
சனி 16, மே 2026 12:44:51 PM (IST)

போர் பதற்றங்களுக்கு இடையிலும் உயர்ந்த இந்தியாவின் அந்நியச் செலாவணி: ரிசர்வ் வங்கி அறிக்கை
சனி 16, மே 2026 12:21:02 PM (IST)

மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கை தோல்வி : கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் சாடல்!
சனி 16, மே 2026 8:32:00 AM (IST)

அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் நீட் தேர்வு: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவிப்பு!
வெள்ளி 15, மே 2026 12:44:50 PM (IST)

செப்.30 வரை சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை - மத்திய அரசு உத்தரவு
வெள்ளி 15, மே 2026 12:03:01 PM (IST)


