» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஜக்கி வாசுதேவ் போன்ற போலி வீடியோ உருவாக்கி பெண்ணிடம் ரூ.3.75 கோடி நூதன மோசடி!
சனி 13, செப்டம்பர் 2025 12:30:17 PM (IST)
ஜக்கி வாசுதேவ் பேசுவது போன்று தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பெண்ணிடம் ரூ.3.75 கோடி நூதன மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பெங்களூரு சி.வி.ராமன்நகர் பகுதியில் 57 வயது பெண் வசித்து வருகிறார். அவர் தனது செல்போனில் சமூக வலைதளத்தில் வீடியோக்களை பார்த்து கொண்டிருந்தார். அப்போது ஜக்கி வாசுதேவ் பேசும் ஒரு வீடியோ வந்தது. அந்த வீடியோ முழுவதையும் அப்பெண் பார்த்தார். அந்த வீடியோவில் தான் கூறியபடி முதலீடு செய்தால், அதிக லாபம் பெற்றுக் கொடுப்பதாகவும், இதற்காக வீடியோவில் இருக்கும் லிங்கை கிளிக் செய்து இ-மெயில், செல்போன் எண்ணை பதிவிடும்படியும் பேசி இருந்தார்.
இதனை நம்பிய அவரும், லிங்கை கிளிக் செய்து இ-மெயில், செல்போன் எண்ணை பதிவிட்டார். அதன்பிறகு, 2 மர்மநபர்கள் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு பேசினார்கள். தாங்கள் கூறும்படி முதலீடு செய்தால், அதிக லாபம் பெற்றுக் கொடுப்பதாக கூறினார்கள். உடனே அவரும் முதலில் குறைவான அளவே பணத்தை முதலீடு செய்திருந்தார்.
மர்மநபர்கள் வற்புறுத்தலின் பேரில் குறிப்பிட்ட இடைவெளியில் ரூ.3.75 கோடியை அந்த பெண் முதலீடு செய்தார். ஆனால் அவர் முதலீடு செய்த பணத்திற்காக அதிக லாபம் எதையும் மர்மநபர்கள் கொடுக்கவில்லை. இதனால் ரூ.3.75 கோடியை திரும்ப எடுக்க அப்பெண் முயன்றார். ஆனால் பணத்தை திரும்ப எடுக்க முடியாமல் போனது. மர்மநபர்களை தொடர்பு கொள்ள முயன்ற போது, 2 பேரின் செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
அப்போது தான் மர்மநபர்கள் தன்னிடம் ரூ.3.75 கோடியை வாங்கி மோசடி செய்தது தெரியவந்தது. மேலும் ஜக்கி வாசுதேவ் பேசுவது போன்று தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு தன்னை மோசடியில் சிக்க வைத்திருப்பதையும் பெண் உணர்ந்தார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மருத்துவ உலகில் பெரு வியப்பு: 5 நாட்கள் போராடி 4 குழந்தைகளை சுகப்பிரசவத்தில் பெற்றெடுத்த பெண்!
சனி 16, மே 2026 5:24:58 PM (IST)

பிரதமரின் வேண்டுகோளை மீறி வாகன ஊர்வலம்: பாஜக பிரமுகர் மீது ம.பி முதல்வர் நடவடிக்கை
சனி 16, மே 2026 12:44:51 PM (IST)

போர் பதற்றங்களுக்கு இடையிலும் உயர்ந்த இந்தியாவின் அந்நியச் செலாவணி: ரிசர்வ் வங்கி அறிக்கை
சனி 16, மே 2026 12:21:02 PM (IST)

மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கை தோல்வி : கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் சாடல்!
சனி 16, மே 2026 8:32:00 AM (IST)

அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் நீட் தேர்வு: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவிப்பு!
வெள்ளி 15, மே 2026 12:44:50 PM (IST)

செப்.30 வரை சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை - மத்திய அரசு உத்தரவு
வெள்ளி 15, மே 2026 12:03:01 PM (IST)


