» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கரூர் துயர சம்பவம்: விஜய் உடன் ராகுல் காந்தி தொலைபேசியில் பேச்சு!

திங்கள் 29, செப்டம்பர் 2025 11:25:52 AM (IST)



கரூர் துயர சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய்யை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

கரூர்  கூட்ட நெரிசல் சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தச் சம்பவத்தில் 41 பேர் பலியாகியுள்ளனர். கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என்று தவெக தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட சனிக்கிழமையன்று உடனடியாக சென்னையில் உள்ள தனது இல்லத்திற்கு திரும்பிய விஜய், அதன் பிறகு வீட்டை விட்டு வெளியே வரவில்லை. 

கிட்டத்தட்ட 34 மணி நேரத்திற்கு பிறகே இன்று காலை விஜய் தனது வீட்டிலிருந்து கிளம்பி வெளியே சென்றுள்ளார். பலத்த பாதுகாப்புடன் விஜய் தனது காரில் புறப்பட்டுள்ளார். அவர் எங்கு செல்கிறார் என்ற விவரம் வெளியாகவில்லை.

இதற்கிடையே, தவெக தலைவர் விஜயை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் எப்படி ஏற்பட்டது என்பது தொடர்பாகவும், பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்து விஜயிடம் கேட்டறிந்ததாகவும், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory