» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பீகார் சட்ட சபை தேர்தல்: இந்தியா கூட்டணி முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ்!

வியாழன் 23, அக்டோபர் 2025 3:24:12 PM (IST)

பீகார் சட்ட சபை தேர்தலில் இந்தியா கூட்டணி முதல்வர் வேட்பாளராக  தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
 
243 தொகுதிகளை கொண்ட பீகாரில் அடுத்த மாதம் (நவம்பர்) 6 மற்றும் 11-ம் தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி (மெகா கூட்டணி) என 2 பிரதான கூட்டணி கட்சிகளும், பிரசாந்த் கிஷோரின் ஜன சுராஜ் கட்சியும் களத்தில் உள்ளன. 

மும்முனை போட்டி வரும் நிலையில், இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் கடும் இழுபறி நீடித்து வந்தது. தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால், இந்தியா கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியே வேட்பாளர்களை அறிவித்தன.

இந்த நிலையில், இன்று பாட்னாவில் இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, இந்தியா கூட்டணி கட்சிகளின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். துணை முதல்வர் வேட்பாளராக விஐபி கட்சியின் முகேஷ் சஹானி அறிவிக்கப்பட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory