» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இளைஞர்கள், மகளிருக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை: கேரள முதல்வர் அறிவிப்பு
வியாழன் 30, அக்டோபர் 2025 5:49:22 PM (IST)
தமிழ்நாட்டை தொடர்ந்து கேரளாவிலும் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
அரசின் எந்த திட்டத்திலும் பயனாளியாக இல்லாத 35 வயது முதல் 60 வயதுக்குள் உள்ள 31.34 லட்சம் மகளிருக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ.3800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.மேலும், பிளஸ்-2, ஐடிஐ, டிப்ளமோ அல்லது பட்டப்படிப்புகளை முடித்த பிறகு, திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் அல்லது போட்டித் தேர்வு பயிற்சியில் கலந்து கொள்ளும் பொருளாதாரத்தில் பின்தங்கிய இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டு குடும்ப வருமானம் ரூ.1 லட்சத்திற்கும் குறைவாக உள்ள 18 முதல் 30 வயதுடைய இளைஞர்கள் இந்த திட்டத்தில் பலன்பெறலாம். இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் ஐந்து லட்சம் இளைஞர்கள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாபெரும் ஆளுமை முத்துராமலிங்கத் தேவர் - பிரதமர் மோடி புகழஞ்சலி
வியாழன் 30, அக்டோபர் 2025 4:00:38 PM (IST)

இந்திய கம்யூனிஸ்ட் கடும் எதிர்ப்பு: பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இருந்து விலக கேரள அரசு முடிவு
வியாழன் 30, அக்டோபர் 2025 12:10:35 PM (IST)

ரபேல் போர் விமானத்தில் 15 ஆயிரம் அடி உயரத்தில் பயணம் மறக்க முடியாத அனுபவம்: ஜனாதிபதி மகிழ்ச்சி!
வியாழன் 30, அக்டோபர் 2025 8:20:13 AM (IST)

புஷ்கர் கால்நடைச் சந்தை : எருமைக்கு ரூ.23 கோடி; குதிரைக்கு ரூ.15 கோடி நிர்ணயம்!
புதன் 29, அக்டோபர் 2025 12:52:34 PM (IST)

வட மாவட்டங்களை மிரட்டிய மோந்தா புயல் ஆந்திராவில் கரையை கடந்தது
புதன் 29, அக்டோபர் 2025 10:35:31 AM (IST)

உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சூரியகாந்த்: பி.ஆர்.கவாய் பரிந்துரை!
திங்கள் 27, அக்டோபர் 2025 12:18:51 PM (IST)




