» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பாஜகவினருக்கு ஆயுதங்கள் அளிப்பதை ஆளுநர் நிறுத்த வேண்டும்: திரிண​மூல் எம்பி சர்ச்சை பேச்சு..!

திங்கள் 17, நவம்பர் 2025 11:13:22 AM (IST)

பாஜக.​வினருக்கு ஆயுதங்​கள், வெடிப்​பொருட்​கள் வழங்​கு​வதை ஆளுநர் ஆனந்த போஸ் நிறுத்​திக் கொள்ள வேண்​டும் என்று திரிண​மூல் காங்​கிரஸ் கட்சி எம்​.பி. கல்​யாண் பானர்​ஜி பேசி​யது பெரும் சர்ச்​சையை ஏற்​படுத்தி உள்​ளது.

மேற்கு வங்க மாநிலத்​தில் திரிண​மூல் காங்​கிரஸ் சார்​பில் மம்தா பானர்ஜி முதல்​வ​ராக பொறுப்பு வகிக்​கிறார். இவரது கட்​சி​யின் எம்​.பி. கல்​யாண் பானர்​ஜி. அவ்​வப்​போது ஏதாவது கருத்​துகளை தெரி​வித்து சர்ச்​சை​யில் சிக்கி வரு​கிறார். இந்​நிலை​யில், ‘‘மேற்கு வங்​கத்​தில் திரிண​மூல் காங்​கிரஸ் தொண்​டர்​களை அழிக்க ஆளுநர் சி.​வி.ஆனந்த போஸ், ஆயுதங்​களை​யும் வெடிப்​பொருட்​களையும் பாஜக.​வினருக்கு வழங்கி வரு​கிறார். கிரிமினல்​களுக்கு ஆளுநர் மாளி​கை​யில் அடைக்​கலம் கொடுக்​கிறார். அவற்றை எல்​லாம் ஆளுநர் போஸ் நிறுத்​திக் கொள்ள வேண்​டும்’’ என்று கூறி​னார். இந்த கருத்து பெரும் சர்ச்​சை​யாகி உள்​ளது.

இதுகுறித்து ஆளுநர் போஸ் செய்தியாளர்களிடம் நேற்று கூறிய​தாவது: பொறுப்​பற்ற வகை​யிலும், எரிச்​சலூட்​டும் வகை​யிலும் எம்​.பி. கல்​யாண் பானர்ஜி பேசி​யிருக்​கிறார். இதற்​காக அவர் மன்​னிப்பு கேட்க வேண்​டும். அப்​படி கேட்​கா​விட்​டால் அவர் மீது சட்​டப்​படி நடவடிக்கை எடுப்​பேன். ஆளுநர் மாளி​கை​யில் ஆயுதங்​களும் வெடிப்​பொருட்​களும் இருக்​கின்றன என்று ஆளும் கட்சி எம்​.பி. ஒரு​வர் கூறுகிறார் என்​றால், அவரது மாநிலத்​தின் போலீ​ஸார் மீது நம்​பிக்​கை​யில்​லை​யா?

ஆயுதங்​கள், வெடிப்​பொருட்​கள் இருக்​கின்​றனவா என்​பதை பார்க்க, கல்​யாண் பானர்​ஜி, பத்​திரி​கை​யாளர்​கள், பொது​மக்​களுக்​காக காலை முதல் ஆளுநர் மாளிகை திறந்தே இருக்​கிறது. ஏற்​கெனவே சிலர் வந்து பார்த்து விட்டு சென்​றனர். சிலர் வந்து கொண்​டிருக்​கின்​றனர். ஆனால் கல்​யாண் பானர்ஜி எங்​கே? ஆளுநர் மாளி​கையை கொல்​கத்தா போலீ​ஸார் பாது​காத்து வரு​கின்​றனர். அப்​படி இருக்​கை​யில் இங்கு ஆயுதங்​களும் வெடிப்​பொருட்​களும் எப்​படி வரும்? கல்​யாண் பானர்ஜி கூறியது குறித்து உடனடி​யாக தீவிர விசா​ரணை நடத்த வேண்​டும். அவரது கருத்து ஆளுநரின் பாது​காப்​புக்​கான அத்​து​மீறலாகும். இவ்​வாறு அவர் கூறி​யுள்​ளார்.

பாஜக எம்​.பி. ஜகநாத் சர்​கார் கூறும்​போது, ‘‘கல்​யாண் பானர்​ஜி​யின் மனநலம் சமநிலை​யில் இல்​லை. எம்​.பி.​யாக இருக்​கும் ஒரு​வர் இது​போன்ற கருத்து தெரி​வித்​துள்​ள​தால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும்’’ என்​றார். பாஜக மூத்த தலை​வர் அக்​னிமித்ரா பால் கூறும்​போது, ‘‘ஆளுநர் மாளி​கை​யில் வெடிப்​பொருட்​களும் ஆயுதங்​களும் இருக்​கின்றன என்று ஆளும் கட்சி எம்​.பி. ஒரு​வர் கூறுகிறார் என்​றால், அவர் முதல்​வர் மம்தா பானர்​ஜியை​தான் குற்​றம் சொல்​வ​தாக அர்த்​தம். ஏனெனில், ஆளுநர் மாளி​கை​யின் பாது​காப்பு கொல்​கத்தா போலீ​ஸிடம் உள்​ளது​’’ என்​றார்​.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory