» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஏடிஎம் வாகன கொள்ளை வழக்கில் போலீஸ்காரர் உட்பட 3 பேர் கைது : ரூ. 5.76 கோடி பறிமுதல்!

சனி 22, நவம்பர் 2025 4:57:44 PM (IST)



பெங்களூருவில் ஏடிஎம் வாகன கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ. 5.70 கோடி பணம் மீட்கப்பட்டுள்ளது. 

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஜேபி நகரில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்ப ரூ. 7.11 கோடி பணத்துடன் தனியார் பாதுகாப்பு நிறுவன வானத்தில் கடந்த 19ம் தேதி ஊழியர்கள் சென்றனர். அந்த வாகனத்தில் டிரைவர், துப்பாக்கியுடன் கூடிய 2 பாதுகாவலர்கள் உள்பட 4 பேர் பயணித்தனர்.

இதனிடையே, ஜெயநகர் அருகே அசோக் பில்லர் பகுதியில் சென்றபோது அந்த வாகனத்தை சொகுசு காரில் வந்த சிலர் இடைமறித்தனர். ரிசர்வ் வங்கி, மத்திய அரசு அதிகாரிகள் என கூறிக்கொண்ட அவர்கள் பணத்தை சோதனை செய்ய வேண்டும் என கூறி வாகனத்தை கடத்தி சென்றனர். பின்னர், அந்த வாகனத்தில் இருந்த ரூ. 7.11 கோடி பணத்தை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் ஏடிஎம் வாகனத்தில் இருந்து பணத்தை கொள்ளையடித்து சென்ற கும்பலை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், ஏடிஎம் வாகன கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த  போலீஸ் கான்ஸ்டபிள் அன்னப்ப நாயக், தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் சேவியர், பணத்தை எடுத்துசெல்லும் வாகனத்திற்கான பொறுப்பாளர் கோபால் பிரசாத் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அவர்களிடம் இருந்து ரூ. 5.70 கோடி மீட்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளை சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு உள்ள நிலையில் அவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர். அதேவேளை, இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக 30 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory