» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
சாகர் தீவை இணைக்க ரூ.1,670 கோடி செலவில் பாலம்: மம்தா பானர்ஜி அடிக்கல் நாட்டினார்
செவ்வாய் 6, ஜனவரி 2026 11:51:15 AM (IST)

சாகர் தீவை இணைக்கும் வகையில் 5 கிலோமீட்டர் தூரத்துக்கு ரூ.1,670 கோடி செலவில் பாலம் அமைக்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அடிக்கல் நாட்டினார்.
மேற்கு வங்க மாநிலத்தில் ஆண்டுதோறும் கங்காசாகர் மேளா சாகர் தீவில் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14-ம் தேதி மகர சங்கராந்தி அன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கானவர்கள் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள இந்த தீவுக்கு வந்து சங்கமத்தில் நீராடி கபில் முனி கோவிலில் பிரார்த்தனை செய்கின்றனர்.
சாகர் தீவிற்கு படகுகள் மூலமாக மட்டுமே செல்ல முடியும் என்பதால் ஆண்டுதோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்த நிலையில், யாத்ரீகர்களின் வசதியை கருத்தில் கொண்டு சாகர் தீவை இணைக்கும் வகையில் 5 கிலோமீட்டர் தூரத்துக்கு ரூ.1,670 கோடி செலவில் பாலம் அமைக்கப்பட உள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று இதற்கான அடிக்கல் நாட்டினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக போராட உறுதி : இஸ்ரேல் பிரதமருடன் மோடி பேச்சு!
புதன் 7, ஜனவரி 2026 5:21:12 PM (IST)

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா மருத்துவமனையில் அனுமதி
செவ்வாய் 6, ஜனவரி 2026 4:56:38 PM (IST)

சட்டவிரோத தகவல், படங்கள் பதிவிட்டால் தடை: பயனர்களுக்கு எக்ஸ் தளம் எச்சரிக்கை
திங்கள் 5, ஜனவரி 2026 12:11:59 PM (IST)

பெண்களின் ஆபாச ஏஐ வீடியோ, படங்களை நீக்க வேண்டும்: எக்ஸ் தளத்துக்கு மத்திய அரசு கெடு!
சனி 3, ஜனவரி 2026 3:37:12 PM (IST)

இந்தியாவின் துணிச்சல் மிக்க வீராங்கனை வேலுநாச்சியார்: பிரதமர் மோடி புகழாரம்!
சனி 3, ஜனவரி 2026 11:06:20 AM (IST)

மத்திய பிரதேசத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த விவகாரம்: உயிரிழப்பு 11 ஆக உயர்வு!
வெள்ளி 2, ஜனவரி 2026 5:05:35 PM (IST)

