» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பனிச்சறுக்கு விபத்து: வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் மகன் மரணம்!

வியாழன் 8, ஜனவரி 2026 10:19:38 AM (IST)



ஸ்டெர்லைட் வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வாலின் மகன் அக்னிவேஷ் அகர்வால் பனிச் சறுக்கில் ஈடுபட்டபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வேதாந்தா குழுமம் செயல்பட்டு வருகின்றது. தமிழ்நாட்டின் தூத்துக்குடி பகுதியில் ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வருகின்றது. வேதாந்தா குழுமத்துக்குச் சொந்தமான தல்வண்டி சபோ பவர் லிமிட்டட் நிறுவனத்தின் தலைவராகவும், அக்குழுமத்தின் பல்வேறு நிறுவனங்களின் நிர்வாக உறுப்பினராக அக்னிவேஷ் அனில் அகர்வால் (49) செயல்பட்டு வருகிறார்.

இவர் அமெரிக்காவில் பனிச் சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். நியூயார்க் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், திடீர் மாரடைப்பு காரணமாக நேற்று (புதன்கிழமை) உயிரிழந்தார்.

மகன் இறந்த நிலையில், வேதாந்தா சேர்மன் அனில் அகர்வால், "தன் குழந்தைக்கு விடை கொடுக்க வேண்டிய ஒரு பெற்றோரின் வலியை விவரிக்க வார்த்தைகளே இல்லை. ஒரு மகன் தன் தந்தைக்கு முன்பாகப் பிரிந்து செல்லக்கூடாது. இந்த இழப்பு எங்களை நாங்கள் இன்னும் புரிந்துகொள்ள முடியாத வழிகளில் நொறுக்கிவிட்டது.."என்று வேதனையை பகிர்ந்துள்ளார்.


மக்கள் கருத்து

இது தான்Jan 8, 2026 - 07:05:02 PM | Posted IP 104.2*****

கர்மா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory