» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தீபக் தற்கொலை வழக்கு: யூடியூபர் ஷிம்ஜிதாவிற்கு நிபந்தனை ஜாமின்!

வியாழன் 12, பிப்ரவரி 2026 3:55:54 PM (IST)

கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தீபக் தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் ஷிம்ஜிதாவிற்கு ஜாமின் வழங்கி கோழிக்கோடு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த தீபக் என்பவர், பேருந்தில் நடந்ததாகக் கூறப்படும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் தொடர்பாகத் தூண்டுதல் அளித்ததாகக் கூறி யூடியூபர் ஷிம்ஜிதா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார்.

ஷிம்ஜிதா கடந்த 21 நாட்களாக சிறையில் இருந்து வந்தார்.  அவர் ஏற்கனவே 21 நாட்கள் சிறையில் இருந்ததைக் கருத்தில் கொண்டு, கோழிக்கோடு நீதிமன்றம் அவருக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமினை தற்போது வழங்கியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory