» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஆந்திராவில் கொடூரம்: கள்ளக்காதலியைக் கொன்று பிரிட்ஜில் வைத்த கடற்படை ஊழியர்!
செவ்வாய் 31, மார்ச் 2026 12:25:07 PM (IST)

பணம் கேட்டுத் தொந்தரவு செய்ததாகக் கூறி, தனது கள்ளக்காதலியைக் கொலை செய்து, உடலைத் துண்டு துண்டாக வெட்டிப் பிரிட்ஜில் ஒளித்து வைத்த கடற்படை ஊழியரின் செயல் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம், ராஜாம் பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திரா (35). இவர் விசாகப்பட்டினத்தில் உள்ள இந்தியக் கடற்படையில் தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றி வருகிறார். அங்குள்ள எல்.வி. நகர் அடுக்குமாடி குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.
ரவீந்திராவிற்கும், மவுனிகா (29) என்ற பெண்ணிற்கும் திருமணத்திற்கு முன்பிருந்தே பழக்கம் இருந்துள்ளது. ரவீந்திராவிற்குத் திருமணமாகி குடும்பம் இருந்தபோதிலும், மவுனிகாவுடனான கள்ளத்தொடர்பு நீடித்து வந்துள்ளது. சமீபகாலமாக மவுனிகா, ரவீந்திராவிடம் அடிக்கடி பணம் கேட்டுத் தொந்தரவு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரவீந்திரா, மவுனிகாவைக் கொலை செய்யத் திட்டமிட்டார்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ரவீந்திராவின் மனைவி தனது தாய் வீட்டிற்குச் சென்றிருந்தார். வீட்டில் யாரும் இல்லாததைப் பயன்படுத்திக் கொண்ட ரவீந்திரா, நேற்று முன்தினம் இரவு மவுனிகாவைத் தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் பண விவகாரத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற ரவீந்திரா, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மவுனிகாவைச் சரமாரியாகக் குத்திக் கொலை செய்தார். அதோடு நிற்காமல், உடலை மறைப்பதற்காக மவுனிகாவின் உடலைத் துண்டு துண்டாக வெட்டி, பிளாஸ்டிக் பைகளில் அடைத்துப் பிரிட்ஜிற்குள் வைத்துள்ளார்.
போலீசில் சரண்:
இந்தக் கொடூரச் செயலைச் செய்த பின்னர், ரவீந்திரா நேரடியாகக் காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்தார். அவர் கூறிய தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸார், உடனடியாக ரவீந்திராவின் வீட்டிற்குச் சென்று சோதனை நடத்தினர். அங்கிருந்த பிரிட்ஜில் இருந்து மவுனிகாவின் உடல் பாகங்களை மீட்டனர்.
பிரிட்ஜில் இருந்த உடல் பாகங்களில் மவுனிகாவின் தலை மட்டும் இல்லை என்பது போலீஸாருக்குத் தெரியவந்தது. தலையை ரவீந்திரா எங்கு வீசினார் என்பது குறித்துப் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணம் கேட்டுத் தொந்தரவு செய்ததால் இந்தக் கொலையைச் செய்ததாக ரவீந்திரா வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து அவரைப் போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் விசாகப்பட்டினம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பீகார் கோவில் திருவிழாவில் பெரும் சோகம்: கூட்ட நெரிசலில் 8 பெண்கள் உயிரிழப்பு!
செவ்வாய் 31, மார்ச் 2026 5:24:20 PM (IST)

கேரளாவில் பா.ஜனதா ஆட்சியின் நுழைவுவாயில் பாலக்காடு - பிரதமர் மோடி பிரசாரம்!
திங்கள் 30, மார்ச் 2026 9:34:25 AM (IST)

மில்க்ஷேக்கில் விஷம் கலந்து தந்தையை கொன்ற பெண் காவலர்: 3 ஆண்டுகளுக்குப் பின் அம்பலம்!
ஞாயிறு 29, மார்ச் 2026 10:41:26 AM (IST)

மேற்காசிய நெருக்கடியை முழு பலத்துடன் இந்தியா எதிர்கொண்டு வருகிறது: பிரதமர் மோடி உரை
சனி 28, மார்ச் 2026 4:10:10 PM (IST)

ஏப்ரல் 1 முதல் வங்கி விதிமுறைகளில் அதிரடி மாற்றம்: ஏ.டி.எம் பரிவர்த்தனை கட்டணம் உயர்வு!
சனி 28, மார்ச் 2026 12:18:19 PM (IST)

நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கா? சமூக வலைதள வதந்திகளுக்கு மத்திய அரசு விளக்கம்!
வெள்ளி 27, மார்ச் 2026 11:49:11 AM (IST)

