» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அக்சய் குமார் மகளுக்கு ஆன்லைன் கேமில் பாலியல் தொல்லை: மர்ம ஆசாமி கைது!

சனி 25, ஏப்ரல் 2026 5:35:24 PM (IST)

பிரபல பாலிவுட் நடிகர் அக்சய் குமாரின் 13 வயது மகளுக்கு ஆன்லைன் கேமிங் தளம் மூலம் ஆபாச மெசேஜ் அனுப்பித் தொல்லை கொடுத்த நபரை மகாராஷ்டிரா சைபர் போலீஸார் கைது செய்துள்ளனர்.

நடிகர் அக்சய் குமார் மற்றும் டிவிங்கிள் கன்னா தம்பதியரின் மகள் நிதாரா (13). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆன்லைன் கேம் விளையாடிக்கொண்டிருந்தபோது, மர்ம நபர் ஒருவர் அவரிடம் பாலியல் ரீதியான புகைப்படங்களைக் கேட்டு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த நிதாரா, உடனடியாகத் தனது தாய் டிவிங்கிள் கன்னாவிடம் இது குறித்துத் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அக்சய் குமார் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, குழந்தைகளுக்கு ஆன்லைன் தளங்களில் ஏற்படும் இத்தகைய ஆபத்துகள் குறித்து உருக்கமாகப் பகிர்ந்துகொண்டார்.

அக்சய் குமார் அளித்த புகாரின் அடிப்படையில், மகாராஷ்டிரா சைபர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். டிஜிட்டல் தடயங்கள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களை ஆய்வு செய்ததில், குறிப்பிட்ட அந்த நபர் அடையாளம் காணப்பட்டார்.

தற்போது அந்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பிரபல நடிகரின் மகளுக்கே ஆன்லைன் கேமிங் தளத்தில் இத்தகைய தொல்லை நேர்ந்திருப்பது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோர்களுக்கு எச்சரிக்கை: குழந்தைகள் ஆன்லைனில் கேம் விளையாடும்போது அல்லது சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும்போது அவர்கள் யார் யாருடன் உரையாடுகிறார்கள் என்பதைப் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் எனவும், இது போன்ற புகார்களை உடனடியாகச் சைபர் கிரைம் பிரிவிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory