» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பதவி விலக மறுத்த மமதா: சட்டப்பேரவையைக் கலைத்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

வியாழன் 7, மே 2026 9:00:04 PM (IST)



மேற்கு வங்கத்தில் முதல்வர் பதவியிலிருந்து விலக மமதா பானர்ஜி மறுப்பு தெரிவித்த நிலையில் அம்மாநில சட்டப்பேரவையைக் கலைப்பதாக ஆளுநர் ஆர்.என். ரவி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில், பாஜக தலைமையிலான கூட்டணி 207 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதன் மூலம் திரிணமூல் காங்கிரஸின் நீண்டகால ஆட்சி முடிவுக்கு வந்தது. ஆனால், வாக்கு எண்ணிக்கையில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றம் சாட்டிய மமதா பானர்ஜி, முதல்வர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை என அதிரடியாக அறிவித்தார்.

பாஜக தலைமையிலான புதிய அரசு நாளை மறுநாள் (மே 9) பதவியேற்கத் திட்டமிட்டிருந்த சூழலில், மமதாவின் பிடிவாதம் அரசியல் சாசன நெருக்கடியை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 174 (2)(பி)-ன் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, மேற்கு வங்க சட்டப்பேரவையைக் கலைப்பதாக ஆளுநர் ஆர்.என். ரவி அறிவித்துள்ளார்.

நிபுணர்களின் கருத்து: மேற்கு வங்க அரசின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இந்தச் சூழல் குறித்து மத்திய அரசின் முன்னாள் செயலர் ஜவஹர் சிர்கார் கூறுகையில், "புதிய முதல்வர் முறைப்படி பதவியேற்கும் வரை, அம்மாநிலத்தில் நிலவும் இடைக்கால அரசுக்கான தலைமையை ஆளுநரே ஏற்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

மமதா பானர்ஜியின் எதிர்ப்பு மற்றும் ஆளுநரின் இந்தத் தீர்க்கமான முடிவால் மேற்கு வங்க அரசியலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory