» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
எம்ஜிஆர், ஜெயலலிதா வரிசையில் விஜய்: கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் சுவாமி தரிசனம்...!
வெள்ளி 12, ஜூன் 2026 5:43:40 PM (IST)

தனது 3 நாள் டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு, கர்நாடக மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்குச் சென்ற தமிழக முதலமைச்சர் விஜய், அங்குச் சிறப்புச் சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார்.
டெல்லியில் இருந்து விமானம் மூலம் கர்நாடக மாநிலம் மங்களூரு வந்தடைந்த முதலமைச்சர் விஜய், அங்கிருந்து சாலை மார்க்கமாகக் காரில் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்குச் சென்றார். கோவில் வளாகத்திற்கு வந்த அவருக்குக் கோவில் அர்ச்சகர்கள் மற்றும் நிர்வாகிகள் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு, கோவிலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டார்.
வெள்ளி வாள் காணிக்கை
தொடர்ந்து, மூலவர் மூகாம்பிகை அம்மனை நேரில் தரிசித்து வழிபாடு செய்த முதலமைச்சர் விஜய், பின்னர் கோவில் பிரகாரத்தை முறைப்படி சுற்றி வலம் வந்தார். இந்த வழிபாட்டின் போது, கோவிலுக்கு 1 கிலோ 600 கிராம் எடையுள்ள, 2.5 அடி நீளமுடைய பிரம்மாண்ட வெள்ளி வாள் ஒன்றைக் காணிக்கையாக அவர் வழங்கினார். வழிபாடுகளை முடித்துக் கொண்ட பின்னர் அவர் அங்கிருந்து காரில் புறப்பட்டுச் சென்றார்.
முதலமைச்சர் விஜய்யின் வருகையையொட்டி கொல்லூர் மூகாம்பிகை கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதையொட்டி, அங்குத் தடுப்புகள் அமைக்கப்பட்டுப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
எம்ஜிஆர், ஜெயலலிதா வரிசையில் விஜய்
தமிழக அரசியலின் பெரும் ஆளுமைகளான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரும் தமிழக முதலமைச்சர்களாக இருந்தபோது, இந்தத் திருத்தலத்திற்கு வந்து சாமி தரிசனம் செய்துள்ளனர். அந்த வரிசையில் தற்போது தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய்யும் இங்கு வந்து வழிபாடு நடத்தியிருப்பது அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கத்தக்க ஒன்றாக மாறியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தெலுங்கானாவில் சிறுமி உட்பட 6 பேர் கொலை வழக்கு: போக்சோ குற்றவாளி தற்கொலை!
செவ்வாய் 14, ஜூலை 2026 11:32:49 AM (IST)

பிரிவினைவாதிகளைப் புகழ்ந்து புத்தகம் வெளியீடு: 3 பதிப்பாளர்கள் அதிரடி கைது!
திங்கள் 13, ஜூலை 2026 12:07:20 PM (IST)

ராமர் கோவிலில் கொள்ளையடித்தவர்களைத் தூக்கிலிடும் வரை ஓய மாட்டோம்: கேஜ்ரிவால் உறுதி!
திங்கள் 13, ஜூலை 2026 11:47:18 AM (IST)

பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி காலமானார்: பிரதமர் மோடி, முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல்!
ஞாயிறு 12, ஜூலை 2026 12:05:10 PM (IST)

அரசு விழாக்களில் இனி மாநிலப் பாடலே முதலில் பாடப்பட வேண்டும்: மத்திய அரசு உத்தரவு!
சனி 11, ஜூலை 2026 3:40:12 PM (IST)

பாலியல் புகார் அளித்த சிறுமி உட்பட 6 பேர் கொடூர கொலை: போக்சோ குற்றவாளி வெறிச்செயல்!
சனி 11, ஜூலை 2026 11:41:29 AM (IST)


