» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ராஜஸ்தானில் அதிர்ச்சி: கடத்தப்பட்ட 13 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை!
திங்கள் 29, ஜூன் 2026 11:51:00 AM (IST)
ராஜஸ்தானில் 13 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு, சட்டவிரோத தங்கும் விடுதியில் அடைக்கப்பட்டுப் பலரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விடுதி உரிமையாளர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி கடந்த வாரம் தனது வீட்டில் இருந்து திடீரென மாயமாகியுள்ளார். இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் அனுமதியின்றி இயங்கி வந்த சில தங்கும் விடுதிகளில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் இருப்பதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து அமைக்கப்பட்ட தனிப்படையினர், அங்குள்ள ஒரு தங்கும் விடுதியில் அதிரடி சோதனை நடத்திச் சிறுமியைப் பத்திரமாக மீட்டனர்.
போலீசார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையின்படி (FIR), ரிக்ஷா தொழிலாளி ஒருவன் அச்சிறுமியைக் கடத்திச் சென்று, ஸ்ரீ கங்காநகரில் சட்டவிரோதமாக இயங்கி வந்த தங்கும் விடுதி ஒன்றின் உரிமையாளருக்கு விற்றுள்ளான். சிறுமியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த அந்த விடுதி உரிமையாளர், அப்பகுதியிலுள்ள வேறு சில தங்கும் விடுதி உரிமையாளர்களுடனும் மேலாளர்களுடனும் இணைந்து, ஐந்து நாட்களாகச் சிறுமியைத் தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி போலீசாருக்கு அளித்துள்ள வாக்குமூலத்தில், "தொடர்ச்சியாகவும், அடுத்தடுத்துப் பலராலும் நடத்தப்பட்ட வன்கொடுமையால் கடுமையான உடல் மற்றும் மன ரீதியான வலியை அனுபவித்தேன். நான் கதறி அழுதபோதெல்லாம், அவர்கள் என்னை மிரட்டி, கட்டாயப்படுத்தி மதுவைக் குடிக்க வைத்தனர்" என்று தெரிவித்துள்ளார். மீட்கப்பட்ட சிறுமி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இக்குற்றச்சம்பவத்தில் தொடர்புடைய ரிக்ஷா ஓட்டுநர், விடுதி உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களைப் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சட்டவிரோத விடுதிகளை மூடக் கோரி போராட்டம்:
ஸ்ரீ கங்காநகர் மாவட்டம் பிரபலமான சுற்றுலாத் தலம் இல்லை என்ற போதிலும், இந்த மாவட்ட எல்லைக்குள் முறையான அனுமதியின்றி 150க்கும் மேற்பட்ட சட்டவிரோத தங்கும் விடுதிகள் விதிகளுக்குப் புறம்பாகச் செயல்பட்டு வருவது இச்சம்பவத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து சட்டவிரோத தங்கும் விடுதிகளையும் உடனடியாக மூடக் கோரியும், சிறுமியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய குற்றவாளிகளுக்குக் கடுமையான மரண தண்டனை பெற்றுத் தர வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சியினர் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியா உலகின் கப்பல் கட்டுமான மையமாக உருவாகும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 10:58:05 AM (IST)

வாழும் கலை அமைப்புக்கு விதித்த ரூ. 5 கோடி அபராதம் ரத்து: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
சனி 22, ஆகஸ்ட் 2026 5:43:01 PM (IST)

ஏடிஎம்களில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூல்? - எஸ்பிஐ நிர்வாகம் விளக்கம்!
சனி 22, ஆகஸ்ட் 2026 12:00:19 PM (IST)

காவல் நிலையத்தில் ராகுல், பிரியங்கா தர்ணா: டெல்லியில் பெரும் பரபரப்பு!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 4:36:39 PM (IST)

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட தமிழக அரசே இடத்தை தீர்மானிக்கட்டும்! - கேரள முதல்வர்
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 5:56:07 PM (IST)

கிணற்றில் கார் பாய்ந்து தம்பதி, 2 குழந்தைகள் உயிரிழப்பு: தெலுங்கானாவில் சோகம்!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 12:22:33 PM (IST)


