» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
உத்தரபிரதேசத்தில் போலி சான்றிதழ்கள் மூலம் வக்கீலாக பதிவு: 39 பேர் மீது போலீசார் வழக்கு
புதன் 12, ஆகஸ்ட் 2026 12:50:44 PM (IST)
உத்தரபிரதேச பார் கவுன்சிலில் வக்கீலாக பதிவு செய்தவர்களில், யாருடைய பட்டப்படிப்பு சான்றிதழ் போலி என்று தெரிகிறதோ, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த ஜூன் 3-ந் தேதி பரபரப்பு உத்தரவு பிறப்பித்தது.
இதற்கிடையே, உத்தரபிரதேச பார் கவுன்சில், 105 வக்கீல்களுக்கு எதிராக பிரயாக்ராஜ் நகரில் உள்ள சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தது. பதிவு செய்து, வக்கீலாக பணியாற்றுவதற்கான சான்றிதழ் பெற்று வக்கீல் தொழில் செய்து வருவதாக புகாரில் கூறியுள்ளது.
புகாரின் அடிப்படையில், கடந்த 3 நாட்களில் 39 வக்கீல்கள் மீது போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இத்தகவலை சிவில் லைன்ஸ் இன்ஸ்பெக்டர் ராமாஷ்ரே யாதவ் தெரிவித்தார். மீதியுள்ள வக்கீல்கள் மீது ஓரிரு நாட்களில் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும், அதன்பிறகு விசாரணை தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மேற்குவங்கத்தில் ஹோட்டலில் பயங்கர தீ விபத்து: 6 பக்தர்கள் பரிதாப உயிரிழப்பு!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 4:14:51 PM (IST)

சொத்துக் குவிப்பு வழக்கு: ராகுல் காந்திக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 3:37:47 PM (IST)

ஒரே பெயரால் குழப்பம்: ரயிலில் கத்திக்குத்து சம்பவத்தில் நடிகை அந்தாரா பானர்ஜி விளக்கம்!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 10:53:03 AM (IST)

கர்நாடகாவில் என்கவுண்ட்டரில் 3 பேர் சுட்டுக்கொலை : வனத்துறை அலுவலகத்தை பொதுமக்கள் சூறை!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 10:36:06 AM (IST)

உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு முன் காவிரியில் தண்ணீர் திறந்துவிட்ட கர்நாடகா!
சனி 15, ஆகஸ்ட் 2026 12:22:04 PM (IST)

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா புதிய உயரம் தொடும் : சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி!
சனி 15, ஆகஸ்ட் 2026 12:02:22 PM (IST)


