» செய்திகள் - விளையாட்டு » உலகம்

96 வருடம் பழமையான விஸ்கி மதுபாட்டில் ரூ.22 கோடிக்கு ஏலம்!

திங்கள் 20, நவம்பர் 2023 8:05:01 PM (IST)



பழமையான விஸ்கி மதுபாட்டில் ஒன்று பெருந்தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளது.

உலகப் புகழ்பெற்ற விஸ்கி தயாரிப்பு நிறுவனமான மக்கலன் அகாடமி 1926 காலத்தில் தயாரித்த 40 விஸ்கி பாட்டில்களை பாதுகாப்பாக சேமித்து வைத்திருந்தது. அவற்றில் சில மது பாட்டில்கள் அவ்வப்போது ஏலத்தில் விற்கப்பட்டன. மீதம் இருந்த விஸ்கி பாட்டில்கள் இங்கிலாந்தில் காட்சிக்கு வைக்கப்பட்டன. அதில் ஒரு விஸ்கி பாட்டிலை ஏலம் விடுவதாக அறிவித்தனர்.

நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில் அந்த மது பாட்டில் 2.7 மில்லியன் டாலர் தொகைக்கு விற்பனையாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ.22.48 கோடி ஆகும். இது மதுபான ஏலத்தில் ஒரு மைல்கல் சாதனை. இந்த மது பாட்டில் பற்றிய தகவல்கள் சமூக வலைத்தளத்திலும் வைரலாக  பரவி வருகின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory