» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இந்திய நடனக்கலைஞர் சுட்டுக் கொலை: அமெரிக்காவில் தொடரும் பயங்கரம்!!
சனி 2, மார்ச் 2024 5:24:35 PM (IST)
அமெரிக்காவில் இந்தியாவைச் சேர்ந்த அமர்நாத் கோஷ் என்ற நடனக்கலைஞர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
2024ம் ஆண்டு பிறந்ததில் இருந்து அமெரிக்காவில் படிக்கும் இந்தியர்கள் அடுத்தடுத்து இறந்து வருகின்றனர். சிலர் தாக்குதலுக்கு உள்ளான நிலையிலும், ஓரிருவர் மர்மமான முறையிலும் இறந்தனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவைச் சேர்ந்தவர் அமர்நாத் கோஷ். நடனக்கலைஞர். பெற்றோர் இறந்துவிட்டனர். அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் பிஎச்டி படித்து வந்தார். அங்கு அவர், படித்து வந்த கல்வி நிலையம் அருகே நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்த போது, மர்ம நபர்களால் தாக்குதலுக்கு உள்ளாகி, அவர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இதனை கோல்கட்டாவில் வசிக்கும் அவரது நண்பர், சிக்காகோவில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
இதனையடுத்து இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், அமர்நாத் கோஷ் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்களின் அறிக்கையை கவனித்து வருகிறோம் என தெரிவித்துள்ளது. மேலும், "அமர்நாத் கோஷின் உறவினர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும். இந்த சம்பவத்தை போலீசார் மற்றும் கல்வி நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்" என்று தெரிவித்து உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஈரானிய கச்சா எண்ணெய்: டாலருக்குப் பதிலாக சீன யுவானில் பணம் செலுத்திய இந்தியா!
சனி 18, ஏப்ரல் 2026 5:36:01 PM (IST)

ஈரான் உடனான மோதலில் மிக விரைவான வெற்றி: அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு
வெள்ளி 17, ஏப்ரல் 2026 4:57:28 PM (IST)

எரிபொருள் விலை உயர்வு எதிரொலி: பாகிஸ்தானில் தினசரி 2 மணி நேர மின்வெட்டு அமல்!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 11:20:47 AM (IST)

ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம்: அமெரிக்கா பின்வாங்க சவுதி அரேபியா வலியுறுத்தல்
புதன் 15, ஏப்ரல் 2026 4:35:33 PM (IST)

ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது அமெரிக்கா: கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 8% உயர்வு!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 11:43:28 AM (IST)

அமெரிக்காவின் சர்வாதிகாரப் போக்கே பேச்சுவார்த்தை தோல்விக்குக் காரணம்: ஈரான் குற்றச்சாட்டு!
திங்கள் 13, ஏப்ரல் 2026 10:56:21 AM (IST)

