» செய்திகள் - விளையாட்டு » உலகம்
காசாவில் உடனடி போர் நிறுத்தம் : அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் வலியுறுத்தல்
திங்கள் 4, மார்ச் 2024 11:32:18 AM (IST)
காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் வலியுறுத்தியுள்ளார்.

அதன்பின் இரு தரப்பிற்கிடையில் போர் நிறுத்தத்திற்கு முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியில் முடியவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன் உணவு வாங்க கூடியிருந்த பொதுமக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இது உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடனடி போர் நிறுத்தம் தேவை என வலியுறுத்தினார். மேலும், நிவாரணப் பொருட்கள் அமெரிக்க விமானங்கள் மூலம் வான்வழியாக காசா மக்களுக்கு வழங்கப்படும் என அறிவித்தார். இந்த நிலையில் உடனடி போர் நிறுத்தம் தேவை என அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில் "காசா மக்கள் பட்டினியால் வாடுகின்றனர். அங்கு நடக்கும் நிலை மனிதாபிமானமற்றவை. நமது மனிதநேயம் நம்மைச் செயல்படத் தூண்டுகிறது. இஸ்ரேல் அரசு நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணியை இன்னும் அதிகரிக்க வேண்டும். இதில் விதிவிலக்கு என்பதே கிடையாது.
உடனடியாக போர் நிறுத்தம் தேவை. பிணைக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆறு வாரம் போர் நிறுத்தம் இன்னும் அதிகமான உதவிப்பொருட்கள் காசா மக்களுக்கு சென்றடைய உதவியாக இருக்கும்." என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாகிஸ்தானில் இளம்பெண் ஆணவக்கொலை: தந்தை, அண்ணனுக்கு தூக்கு தண்டனை!
புதன் 26, மார்ச் 2025 12:10:16 PM (IST)

இத்தாலியில் திருமணமாகாதவர்கள் குழந்தைகளை தத்தெடுக்க அனுமதி : 40 ஆண்டு தடை நீக்கம்!
செவ்வாய் 25, மார்ச் 2025 12:46:25 PM (IST)

நியூசிலாந்தில் 7 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: பொதுமக்கள் அச்சம்!
செவ்வாய் 25, மார்ச் 2025 12:41:42 PM (IST)

மருத்துவமனையில் இருந்து போப் பிரான்சிஸ் டிஸ்சார்ஜ்
திங்கள் 24, மார்ச் 2025 5:26:06 PM (IST)

கனடாவில் நாடாளுமன்றம் கலைப்பு: முன்கூட்டியே பொதுத் தேர்தலை நடத்த பிரதமர் உத்தரவு!
திங்கள் 24, மார்ச் 2025 10:07:56 AM (IST)

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் மசூதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல்; 44 பேர் பலி
ஞாயிறு 23, மார்ச் 2025 9:53:19 AM (IST)
