» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாலத்தில் இருந்து பஸ் கவிழ்ந்து 45 பேர் பலி: ஈஸ்டர் கொண்டாட சென்றபோது சோகம்!!!

சனி 30, மார்ச் 2024 9:04:18 AM (IST)தென் ஆப்பிரிக்காவில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட சென்றபோது பாலத்தில் இருந்து பஸ் கவிழ்ந்து 45 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

தென் ஆப்பிரிக்காவின் லிம்போபோ மாகாணம் மோரியா நகரில் பிரசித்தி பெற்ற ஒரு தேவாலயம் உள்ளது. விஷேச நாட்களில் இங்கு வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான கிறிஸ்தவர்கள் வருவது வழக்கம். கொரோனா காலத்துக்கு பிறகு மீண்டும் அங்கு ஈஸ்டர் கொண்டாட்டம் இந்த ஆண்டு தொடங்கியது. எனவே அண்டை நாடான போட்ஸ்வானாவில் இருந்தும் பஸ் மூலம் மோரியாவில் உள்ள தேவாலயத்துக்கு கிறிஸ்தவர்கள் புறப்பட்டனர்.

அந்த பஸ்சில் சுமார் 50 பேர் பயணம் செய்தனர். இந்தநிலையில் மொகோபனே-மார்கென் இடையே மாமட்லகலா நகரில் உள்ள பாலம் வழியாக பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் நிலைதடுமாறி பாலத்தின் தடுப்புச்சுவர் மீது மோதி பஸ் தீப்பிடித்தது. பின்னர் சுமார் 165 அடி ஆழ பள்ளத்தில் கீழே விழுந்து பஸ் நொறுங்கியது. இதுகுறித்து தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் அங்கு சென்று பார்த்தபோது அந்த பஸ் தீப்பிடித்து எலும்புக்கூடு போல காட்சி அளித்தது. 

மேலும் டிரைவர் உள்பட 45 பயணிகள் உடல் கருகி பலியாகினர். எனினும் அதிர்ஷ்டவசமாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். மீட்பு படையினர் சிறுமியை மீட்டு ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதற்கிடையே விபத்து நடந்த பகுதிக்கு போக்குவரத்து துறை மந்திரி சிண்டிசிவே சிக்குங்கா நேரில் சென்றார். அப்போது இந்த விபத்தில் பலியானவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் அவர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory