» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இந்தியா-ரஷியா உறவு உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரும்: அமெரிக்கா நம்பிக்கை
புதன் 10, ஜூலை 2024 11:13:07 AM (IST)
ரஷியாவுடனான இந்திய உறவு உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரும் என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மேலும் உக்ரைன் மோதலுக்கான தீர்வு பேச்சுவார்த்தையில்தான் உள்ளது, போர்க்களத்தில் அல்ல என்று அதிபர் புதினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் ரஷியாவுடனான இந்தியாவின் உறவு, உக்ரைனில் உள்ள மோதலை முடிவுக்குக் கொண்டுவர, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை வலியுறுத்தும் திறனைத் தருகிறது என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "உக்ரைனில் அமைதியை நிலைநாட்டுவதற்கான முயற்சிகளுக்கு இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் ஆதரவளிப்பது முக்கியமானதாக நாங்கள் கருதுகிறோம். இதனை அனைத்து நாடுகளும் உணர வேண்டியது அவசியம். ரஷியாவுடனான இந்தியாவின் நீண்டகால உறவு, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கும், அமைதிக்கான நடவடிக்கையை எடுக்கவும் அந்நாட்டு அதிபர் புதினை ஊக்குவிக்கும் என்று அமெரிக்கா நம்புகிறது. போரை தொடங்கிய புதினால், அதனை முடிவுக்கு கொண்டு வர முடியும்" என்று அவர் கூறினார்.
இதனையடுத்து அமெரிக்க வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான மார்கரெட் மேக்லியோட் கூறுகையில், "இந்தியாவும் ரஷியாவும் மிகவும் சிறப்பான கூட்டாண்மையைப் பகிர்ந்து கொள்கின்றன. போருக்கு எதிராக ரஷியாவுக்கு அழுத்தம் கொடுக்க இந்தியா இந்த சிறப்பு கூட்டாண்மையைப் பயன்படுத்த விரும்புகிறோம். உக்ரைனில் ரஷியாவின் போர் ஐ.நா சாசனத்தை மீறுவதாகும்" என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சீன அரசு அதிகாரிகளுடன் ரகசிய தொடர்பு : இந்திய வம்சாவளி ஆலோசகர் அமெரிக்காவில் கைது
புதன் 15, அக்டோபர் 2025 11:48:01 AM (IST)

மாஸ்கோ வரை பாயும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்குவேன்: ரஷியாவுக்கு டிரம்ப் மிரட்டல்!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 10:28:15 AM (IST)

2025ஆம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு
திங்கள் 13, அக்டோபர் 2025 5:21:39 PM (IST)

வர்த்தக போரை விரும்பவில்லை; அமெரிக்காவின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம் - சீனா உறுதி
திங்கள் 13, அக்டோபர் 2025 12:02:17 PM (IST)

ராஜினாமா செய்த 4 நாட்களில் பிரான்ஸ் பிரதமராக செபாஸ்டியன் மீண்டும் நியமனம்
ஞாயிறு 12, அக்டோபர் 2025 11:24:27 AM (IST)

படைகள் வாபஸ் பெறப்பட்டன காசா போர்நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது
சனி 11, அக்டோபர் 2025 4:30:39 PM (IST)
