» செய்திகள் - விளையாட்டு » உலகம்
கனடா பூங்காவில் இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை: இந்திய வாலிபர் கைது!
வெள்ளி 12, ஜூலை 2024 11:51:31 AM (IST)
கனடாவின் நியூ பிரன்ஸ்விக் மாகாணத்தில் உள்ள நீர் பூங்காவில் இளம்பெண்கள், சிறுமிகளிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட இந்திய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கனடா நாட்டின் நியூ பிரன்ஸ்விக் மாகாணத்தில் மான்க்டன் நகரில் நீர் பூங்கா ஒன்று உள்ளது. இதில், 25 வயது இந்திய வாலிபர் ஒருவர் சுற்றி திரிந்துள்ளார். அவர் பூங்காவுக்கு வரும் சிறுமிகள், இளம்பெண்கள் என பலரை கட்டிப்பிடித்து பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு இருக்கிறார். இதுபற்றி 12 பேர் போலீசில் புகார் கூறியுள்ளனர்.இதனை தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் சம்பவ பகுதியில் வைத்து அந்நபரை கைது செய்தனர். இந்த வழக்கு வருகிற அக்டோபர் 24-ந்தேதி மான்க்டன் மாகாண கோர்ட்டில் நடைபெற உள்ளது. இந்த காலகட்டத்தில், பெற்றோர் அவர்களுடைய மகள்களிடம் பேசும்படி போலீசார் கேட்டு கொண்டுள்ளனர். இதில், பாலியல் துன்புறுத்தலில் பாதிக்கப்பட்ட நபராக இருப்பவர்கள் ராயல் கனடா போலீசை தொடர்பு கொள்ளும்படி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர்.
அந்நபரின் அடையாளங்களை போலீசார் வெளியிடவில்லை. எனினும், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அந்த நபரின் புகைப்படங்களை பேஸ்புக்கில் வெளியிட்டு உள்ளார். மற்ற பெற்றோர்களையும் எச்சரித்து உள்ளார். அந்நபர் வேறு சில இந்திய வாலிபர்களுடன் ஒரு குழுவாக சுற்றி திரிய கூடும் என சந்தேகமும் தெரிவித்து உள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வங்கதேசத்தில் இந்துக்களை குறிவைத்து வன்முறை: இந்தியாவுக்கு எதிராக போராட்டம் தீவிரம்!
சனி 20, டிசம்பர் 2025 10:46:38 AM (IST)

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்து
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:18:42 AM (IST)

தைவானுக்கு 10 பில்லியன் டாலர் ஆயுதங்கள் விற்பனை: அமெரிக்கா அறிவிப்பு - சீனா கண்டனம்!
வியாழன் 18, டிசம்பர் 2025 5:48:17 PM (IST)

புயல் காற்றில் உடைந்து விழுந்த சுதந்திர தேவி சிலை: பிரேசிலில் பரபரப்பு!
புதன் 17, டிசம்பர் 2025 11:58:56 AM (IST)

பிரதமர் மோடிக்கு கார் ஓட்டிய ஜோர்டான் இளவரசர்!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 4:03:51 PM (IST)

இந்தியாவுடனான ராணுவ ஒப்பந்த சட்டத்தில் ரஷ்யா அதிபர் புதின் கையெழுத்து!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 11:21:23 AM (IST)

