» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஹைதி நாட்டில் இருந்து கைகோஸ் தீவுக்கு சென்ற படகு தீப்பிடித்து 40 அகதிகள் பலி

ஞாயிறு 21, ஜூலை 2024 9:16:29 AM (IST)



ஹைதி நாட்டில் இருந்து கைகோஸ் தீவுக்கு சென்ற படகு தீப்பிடித்து எரிந்தது. இதில் 40 அகதிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தீவு நாடான ஹைதியில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. எனவே அங்கு வசிக்கும் மக்கள் பிழைப்பு தேடி அகதிகளாக ஐரோப்பா மற்றும் அண்டை நாடுகளுக்கு தப்பிச் செல்கின்றனர். அவ்வாறு செல்லும்போது அவர்கள் பெரும்பாலும் சட்ட விரோதமாக படகுகளிலேயே செல்கின்றனர். அவற்றில் பல பயணங்கள் விபத்தில் முடிகின்றன.

எனவே இதனை கட்டுப்படுத்த அண்டை நாடுகள் தங்களது எல்லையை தீவிரமாக கண்காணித்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டில் மட்டும் இதுவரை சுமார் 86 ஆயிரம் அகதிகள் அண்டை நாடுகளால் ஹைதிக்கு திருப்பி அனுப்பப்பட்டு இருப்பதாக ஐ.நா. தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. எனினும் இந்த சட்ட விரோத படகு பயணம் தொடர் கதையாக உள்ளது. 

இந்தநிலையில் கைகோஸ் தீவுக்கு ஹைதியில் இருந்து ஒரு படகு புறப்பட்டது. இதில் 80-க்கும் மேற்பட்ட அகதிகள் பயணித்தனர்.  படகு திடீரென நடுக்கடலில் தீப்பிடித்து எரிந்தது. இதனால் செய்வதறியாது திகைத்த அகதிகள் கடலில் குதித்தனர். இதுகுறித்து தகவலறிந்த கடலோர போலீசார் மற்றும் மீட்பு படையினர் அங்கு விரைந்தனர். பின்னர் தண்ணீரை பீய்ச்சியடித்து அந்த தீயை அணைக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர்.

இதற்கிடையே கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த அகதிகளையும் மீட்டு மற்றொரு படகு மூலம் கரைக்கு கொண்டு சென்றனர். எனினும் இந்த சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 40 அகதிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் பலியானோருக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகளை தடுக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory