» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இஸ்ரேல் தாக்குதலில் கர்ப்பிணி பெண் மரணம் : குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்கள்

திங்கள் 22, ஜூலை 2024 5:28:59 PM (IST)



காசாவில் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த  கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தையை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றினர்.

பாலஸ்தீன நகரமான காசாவின் பல்வேறு இடங்களில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல் நடத்திவரும் இந்த தாக்குதலில் ஆண்கள், பெண்கள் மட்டுமில்லாமல் பல குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில், நேற்று நள்ளிரவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உட்பட 24க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேலின் இந்த தாக்குதலால் நிறைமாத கர்ப்பிணியான ஓலா அட்னன் ஹர்ப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அதே சமயம் உயிரிழந்த பெண்ணின் வயிற்றில் உள்ள குழந்தைக்கு இதயத்துடிப்பு இருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து குழந்தையை காப்பாற்றியுள்ளனர். உயிருடன் பிறந்த அந்த ஆண் குழந்தை தற்போது நலமுடன் உள்ளது. ஆனால், போர்களத்திற்கு நடுவே பிறப்பதற்கு முன்பே அந்த குழந்தை தனது தாயை இழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory