» செய்திகள் - விளையாட்டு » உலகம்
வயநாடு நிலச்சரிவு: அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷிய அதிபர் புதின் இரங்கல்
வெள்ளி 2, ஆகஸ்ட் 2024 11:44:11 AM (IST)
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 318 ஆக உயர்ந்துள்ளது. இந்த துயர சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "இந்த சோகமான நிகழ்வில் இறந்தோருக்கு ஆழ்ந்த இரங்கல். நிலச்சரிவில் அன்புக்குரியவர்களை இழந்துவாடும் குடும்பங்களுக்கு எங்கள் பிரார்த்தனைகள். பேரிடரில் சிக்கலான மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களின் துணிச்சல், தைரியத்தை நாங்கள் பாராட்டுகிறோம். மக்களை தொடர்ந்து பாதுகாப்போம். இந்த இக்கட்டான நேரத்திலும் நமது எண்ணங்களில் இந்தியா உள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், கேரள நிலச்சரிவின் "துயரமான விளைவுகள்" குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு இரங்கல் செய்தியை அனுப்பினார். அதில், "கேரள நிலச்சரிவில் சிக்கி இறந்தோருக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறந்தவர்களின் நெருங்கிய மற்றும் அன்பானவர்களுக்கு அனுதாபத்தையும் ஆதரவையும் தெரிவிக்கவும், மேலும் காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வாழ்த்துக்களைத் தெரிவிக்கவும்" என்று அவர் தெரிவித்திருந்தார்.
சீனா வெளியிட்டிருந்த இரங்கல் செய்தியில், "இந்திய மாநிலமான கேரளத்தின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு குறித்த செய்தியைப் பார்த்தோம். உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம், மேலும் உயிரிழந்த குடும்பங்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் இதயப்பூர்வமான அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம், மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம்" என்று சீன வெளிநாட்டினர் தெரிவித்துள்ளனர் என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் தெரிவித்திருந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500% வரி: அமெரிக்கா முடிவுக்கு ஜெய்சங்கர் கருத்து!
வியாழன் 3, ஜூலை 2025 5:48:03 PM (IST)

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை விதிப்பு!
புதன் 2, ஜூலை 2025 5:14:15 PM (IST)

பகல்காம் தாக்குதல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: குவாட் அமைப்பு கூட்டறிக்கை
புதன் 2, ஜூலை 2025 10:56:21 AM (IST)

ராணுவ தளபதியை விமர்சித்த தாய்லாந்து பிரதமர் சஸ்பெண்ட்: அரசியலமைப்பு நீதிமன்றம் அதிரடி
புதன் 2, ஜூலை 2025 8:33:27 AM (IST)

எல்லை பிரச்சினையில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: சீனா அறிவிப்பு!
செவ்வாய் 1, ஜூலை 2025 5:41:09 PM (IST)

கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் செல்ல நேரிடும்: எலான் மஸ்க்குக்கு டிரம்ப் எச்சரிக்கை!
செவ்வாய் 1, ஜூலை 2025 3:35:48 PM (IST)
