» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஜப்பான் உட்பட 9 நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு விசா தேவையில்லை : சீனா அறிவிப்பு

சனி 23, நவம்பர் 2024 11:22:51 AM (IST)

ஜப்பான், பல்கேரியா உட்பட 9 நாடுகளின் சுற்றுலா பயணிகளுக்கு விசா தேவையில்லை என சீனா அறிவித்துள்ளது. 

இந்தியாவின் அண்டை நாடாக இருக்கும் சீனாவில் சுற்றுலாவை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பெருந்தொற்று காரணமாக முடங்கி கிடந்த சுற்றுலா துறை தற்போது புத்துயிர் பெற்றுள்ளது.

இதன்படி பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் 9 நாடுகளின் சுற்றுலா பயணிகளுக்கு விசா தேவையில்லை என சீனா அறிவித்துள்ளது. அந்த வகையில் ஜப்பான், பல்கேரியா, ருமேனியா, மால்டா, குரோஷியா, மாண்டினீக்ரோ, வடக்கு மாசிடோனியா, எஸ்டோனியா, லாட்வியா ஆகிய நாடுகளுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளதாக சீனா வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் தெரிவித்தார்

இவ்வாறு பயணம் மேற்கொள்பவர்கள் 30 நாட்கள் வரை சீனாவில் தங்கிக் கொள்ளலாம். இந்த திட்டம் வருகிற 30-ந் தேதி முதல் அமலுக்கு வரும் என கூறப்படுகிறது. இதன் மூலம் சீனாவுக்கு விசா இன்றி பயணம் மேற்கொள்ளும் நாடுகளின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory