» செய்திகள் - விளையாட்டு » உலகம்

உக்ரைனில் குடியிருப்புகள் மீது ரஷ்யா குண்டு வீச்சு : பொதுமக்கள் 13 பேர் உயிரிழப்பு

வியாழன் 9, ஜனவரி 2025 12:01:01 PM (IST)



உக்ரைனில் குடியிருப்புகள் மீது ரஷ்ய ராணுவம் குண்டு வீசியதில் பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர்.

உக்ரைனின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள நகரம் ஸபோரிஷியா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மீது ரஷ்ய ராணுவம் வெடிகுண்டு தாக்குதலை நடத்தியது. இதில், 13 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும், 30க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், தாக்குதலில் ரத்த காயங்களுடன் மக்களுக்கு அவசர சிகிச்சை பிரிவினர் சிகிச்சை கொடுப்பது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும், அவர் கூறியதாவது: ரஷ்யாவின் மனிதாபிமானமற்ற இந்த தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். 

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். ரஷ்யாவின் இந்த தாக்குதலில் சாதாரண பொதுமக்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யா இதுக்கு உரிய பதில் சொல்லியே ஆக வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory