» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தென் கொரியாவில் பதவி விலகிய அதிபர் யூன் சுக் இயோல் கைது!

புதன் 15, ஜனவரி 2025 9:13:46 PM (IST)

தென் கொரியா நாட்டில் அதிபா் பதவியிலிருந்து தற்காலிகமாக விலகியுள்ள யூன் சுக் இயோல்  கைது செய்யப்பட்டுள்ளார். 

தென் கொரிய அதிபா் பதவியிலிருந்து தற்காலிகமாக விலகியுள்ள யூன் சுக் இயோலை நிரந்தரமாகப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி நூற்றுக் கணக்கானோா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், மிகுந்த பரபரப்புக்கிடையே அவர் இன்று(ஜன. 15) கைது செய்யப்பட்டுள்ளார். தென் கொரிய வரலாற்றில் அதிபர் பதவி வகித்து வருபவர் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.

முன்னதாக, தென் கொரிய நாடாளுமன்றத்தை முடக்க எதிா்க்கட்சியினா் முயற்சிப்பதாகவும், வட கொரியாவுக்கு ஆதரவாக அவா்கள் செயல்படுவதாகவும் தெரிவித்து, கடந்த மாதம் தென் கொரியாவில் அவசரநிலை ராணுவச் சட்டத்தை அமல்படுத்துவதாகக் கடந்தாண்டு டிசம்பரில் இயோல்(64) அறிவித்தாா். இதற்கு நாடு முழுவதும் கடும் எதிா்ப்பு எழுந்ததையடுத்து, அந்த அறிவிப்பை அவா் திரும்பப் பெற்றாா்.

எனினும் இந்த விவகாரம் தொடா்பாக அவரை பதவிநீக்கம் செய்து எதிா்க்கட்சியினா் நாடாளுமன்றத்தில் தீா்மானம் நிறைவேற்றினா். இதையடுத்து, அவா் தற்காலிகமாக பதவி விலகினாா். எனினும், தற்போது வரை அவரே அதிபராக நீடிக்கிறார்.

இந்த நிலையில் அவரை நிரந்தரமாகப் பதவிநீக்கம் செய்வது தொடா்பாக அரசியல் சாசன நீதிமன்றம் இறுதி முடிவு எடுக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. அதேவேளையில், அவசரநிலை அறிவிப்பு தொடா்பாக இயோலுக்கு எதிராக நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்தது.

இதனையடுத்து, அவரை காவல் துறையினா் கைது செய்ய கடந்த சில நாள்களாக முயற்சித்து வந்த நிலையில், அவா்களை இயோலின் பாதுகாவல் படையினா் தடுத்து நிறுத்தினா். இதையடுத்து, தங்களின் முயற்சியைக் கைவிட்டு காவல் துறையினா் திரும்பிச் சென்றனா்.

இந்த நிலையில், அவர் இன்று(ஜன. 15) கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் ஊழல் விசாரணை அலுவலக(சிஐஓ) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கப் போவதாக இயோல் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory